பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பூவை எஸ். ஆறுமும்


தானது; மாண்பு பூண்டது! ஆனால் இக்கனி பெறற்கரிய கனியாகும்! ஒரே ஒரு கணிதான் இவ் வகையில் உண்டு! அதுவே தாங்கள் உண்ட கருநெல்லிக்கனி!...” என்று சொன்னான் அரசன்.

அதைக் கேட்டதும் ஒளவைப் பிராட்டி மெய் சிலிர்த்தார். “அப்படியென்றால், நீ அதைப் புசிக்கவில்லையா? தமிழ் வளர்க்கும் வள்ளலான நீ அல்லவா அதை உண்டிருக்க வேண்டும் அதுவன்றோ சால்புடையதாகவும் அமைந்திருக்கும்! உண்மையைச் சொன்னால், நான் அதைப் புசித்திடேன் என்றா பொய் புனைந்தாய்? மன்னவனே! தமிழ் வாழ நீ வாழ்வதன்றே நீதி?” என்று மெய்யுருகினாள் ஒளவை,

தமிழன்னையே! இக்கனியினைத் தாங்கள் புசித்ததே ஏற்றமுடைய செயலாகும். தமிழும் தமிழ் மண்ணும் செழிக்க உழைத்திடும் திறன் பெற்ற தாங்கள் நீடு வாழ்வதே தர்மமாகும். நான் சாதாரண மானுடன். என்னால் இப்புவிக்கு யாது பயன்? ஆகவே, தகுதி பார்த்தே உரிமைப் பரிசு சேர்ந்திருக்கின்றது'’ என்றான் அஞ்சி.

அரசனின் அற்புதச் செய்கையைக் கண்டு ஒளவை வீரக்கழலை உடைய அஞ்சி மன்னவா! நான் வாழ, கருநெல்லிப் பழத்தை எனக்கு ஈந்த வள்ளலே! உன் ஈகைப் பண்பு பெரிது, பெரிது!... இறப்பதற்குக் காரணமான விஷத்தை உண்டும்