பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

”கா!...கா!...கா!...”

அது ஒரு பெரிய காடு. காட்டுக்கு உரிய சகல லட்சணங்களும் ஒருங்கே நிரம்பப் பெற்ற இடம் அது. விலங்குகளுக்குப் புகல் அளித்த விருட்சங்களுக்குப் பஞ்சமில்லை. அங்கங்கே நீர் நிலைகளும் இருந்தன.

அந்தக் காட்டுக்கு அதன் பாரம்பரிய வழக்கப்படி அதிபதியாக இருந்தது சிங்கம் ஒன்று. அது மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டது. அது தனக்குப்பின் வாரிசு எதையும் விட்டுச் செல்ல வில்லை. ஆகையால், அந்தச் சிங்கராஜாவுக்கு ஏற்ற மதியூக மந்திரியாக இருந்த நரியே இப்போது அந்த ஆரண்யத்தை அரசாண்டது. ஆட்சி என்றால் ரொம்பவும் கெடுபிடி. அசல் நரிதர்பார் தான்!

அன்றைய தினம் '’நரி முடிசூட்டிக்கொண்ட திருநாள் நடந்தது. நரியார் தன் இஷ்டப்படி தலையை ஆட்டும் விலங்குகளையே தனது ஐம்பெருங் குழுவில் சேர்த்துக் கொண்டது. விழாவுக்கு சகல