பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இதோ, காந்தி ராஜ்யம்

காந்திராமன் காளியம்மன் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்து விட்டு வேகமாகத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்!---வழியில், அன்னை இந்திரா சதுக்கத்தில் பூவை மாநகர்க் கிராமத்து மக்கள் கூடியிருந்ததைக் கண்டதும், பதற்றத்தோடு ஒருகணம் நின்றான்! வீட்டுக்குப் போய்க் காலைப் பலகாரம் சாப்பிட்டு விட்டு பி. ஏ. வகுப்பில் கல்லூரியில் சேருவதற்காகப் புதுக்கோட்டைக்குப் புறப்பட வேண்டும்!அப்பாவும் அம்மாவும் அங்கே காத்திருப்பார்கள்!கூட்டத்தை நிதானமாகவே ஊடுருவினான் காந்திராமன்.

நடுத்தர வயதுடன் கதர் உடைகள் பளிச்சிடக் கூட்டத்தின் மையத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஆத்மநாதன் பேசிக் கொண்டிருந்தார்:

“அன்புச் சகோதரர்களே!- சகோதரிகளே! நம்முடைய அரசாங்கம் தீவிரமாகவே செயற்படுத்தி வருகிற வயதுவந்தோர் கல்வி வளர்ச்சிக்கான