பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

63


‘'தம்பி, காந்திராமா! இவ்வளவு தூரம் பிறத்தியாருக்குப் பாட்ம் சொல்லிக் கொடுக்கப் பாடு படுற நீ உன் அப்பனைக் கூட்டி வந்து இந்த முதியோர் கல்வித் திட்டத்திலே சேரச் சொல்வது தானே!”

இவ்வாறு யாரோ வயது முதிர்ந்தவர் ஒருவர் ஏளனமாகக் கூவினார்.

காந்திராமன் மெய் ஒடுங்கி ஒரு கணம் நின்றான்; மறு வினாடியில், அவன் தன் வீட்டுக்குப் புறப்படத் திரும்பினான்.

அப்போது, அங்கே பெரியவர் ஆதியப்ப அம்பலம் தன் மனைவி காமாட்சியோடு ஓடிவந்து கொண்டிருந்தார்-"வாத்தியார் ஐயா! நான் வயதானவன்தான்; ஆனாலும், நான் சாகிறப்ப, நாலெழுத்துப் படிச்சுக்கிட்டவன் என்கிற நல்ல பேரோடவே சாக ஆசைப்படுறேன்! அரசாங்கத்தோட முதியோர் கல்வித் திட்டத்திற்கு நானே முன்னே நின்று சேர்ந்து பிள்ளையார் சுழிபோடுறேனுங்க!” என்று பொக்கை வாய்ச் சிரிப்போடு பேசினார் ஆதியப்ப அம்பலம்,

காந்திராமன் ஆனந்தப் பரவசத்தில் மெய் மறந்து நின்றான்!

“மகனே காந்திராமா! நம்ம ஊர்ச்சனங் களிலே படிக்காத பெரியவங்களையெல்லாம் இந்த