பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

69


என்னைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்கள்.நல்லவேளை,நான்தரையில் விழாமல் தப்பினேன். இந்தப் புண்ணியத்துக்காகவும் விளையாட்டில் வென்றதற்காகவும் அரச மரத்தடிப் பிள்ளையாருக்கு மூன்றே மூன்று தோப்புக்கரணம் போட்டு விட்டு வீட்டுக்குப் புறப்பட இருந்தேன்.

அப்போது ஒரு பயங்கர உருவைக் கண்டேன். அவன் தான் கோமாவரம் கருப்பையா, அவன் பெயர் அவனது நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதாவது, அவனுடைய முறுக்கு மீசையும், மசால்வடை கிருதாவும், புளியங்கொட்டைப் பற்களும், சோடாப்புட்டிக் கண்களும், நாவல்பழச் சிவப்பு நிறமும் கொண்ட அவனை இன்னாரென்று எனக்குக் காட்டிக்கொடுத்துத் தொலைத்தன.

உடனே நான் உஷார் ஆகிவிட்டேன். என் நிஜாப்பையில் ஒளிந்து கொண்டிருந்த கைத் துப்பாக்கியை நெருடிப்பார்த்தேன். உடனே, எனக்குத் தைரியம் வந்துவிட்டது.

"அப்பனே, பிள்ளையாரே எப்பவும் போல் இன்றைக்கும் நல்ல பணம் கிடைச்சிடச் செய். எல்லாப் பிரார்த்தனைக்கும் மொத்தமாக ஒரு செக் எழுதித் தந்திடுறேன்!” என்று பக்தியோடு பிள்ளையாரைக் கும்பிட்டான்.

எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன். ஆனால் பீறிட்ட ஆத்திரத்தை மட்டும் அடக்கிக் கொள்ள

ஒ-5