பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

71

நடுச்சாமம் வந்தது. கோமாவரம் கருப்பையா எங்கள் வீட்டில் கன்னக்கோல் வைத்துக் கொண்டு என் முன்னே தோன்றிவிட்டான்.

என்னுடைய ஆத்திரம் விசுவரூபம் எடுத்தது. "யார் நீ?" என்று அதட்டினேன்.

அவன் அரிச்சந்திரனுக்கு அண்ணன் போலிருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொன்னான்.

எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. திருடுகிற இந்த ஈனப் பிழைப்பைச் செய்ய் உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று பெரிய குரலில் கேட்டு விட்டு அவனுடைய முகமூடியைப் பறித்தேன்.

அசந்து நின்ற அவன் "வெட்கமாகத்தான் இருக்குது ஆனால்,என்னோட யானைப்பசிக்கு யார் பதில் சொல்வது?" என்று என்னையே மடக்கினான்.

  • உழைத்துப் புசிப்பதுதானே?”

"திருடனுக்கு யார் வேலை கொடுப்பாங்க?”

“அப்பாவிடம் சொல்லி உனக்கு வேலை போட்டுத் தருகிறேன். இன்று போய் நாளை வா!"

“சரி; இன்றுமட்டும் இங்குள்ளதை அப கரித்துக் கொண்டு, நாளை நல்லவனாகத் திரும்பி வருகிறேன்!” என்று சிரித்தான் அந்தத் திருடன்.

என் ஆத்திரத்துக்கு 144 போட்டுவிட்டு, ஒரு சோதனை நடத்தினேன்.