பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பூவை எஸ். ஆறுமுகம்


அப்பனே! எங்க சொத்தைக் கொள்ளை அடிக்கிறதிலே நீ இவ்வளவு சந்தோஷப்படுறாயே! அந்தச்சொத்தை இழந்தால் நாங்கள் வேதனைப்பட நேருமே, அந்த உண்மையை நீ எப்போதாவது சிந்திச்சுப் பார்த்தது உண்டா? எதைச் செய்தாலும் அவங்களோட மனசுக்கும் ஊர் உலகத்துக்கும் உண்மையாக நடக்க வேணும்னு காந்தி என்கிற: மகாத்மா சொல்லியிருக்காங்க! நீ கண்ணுக்குத் தெரிகிற சட்டத்தை ஏமாத்திடலாம். ஆனா, கண்ணுக்குத் தெரியாத கடவுளை உன்னாலே ஏமாத்திட முடியுமா? ஊம், சொல்!” என்றுஅமைதியாகக் கேட்டேன்.

அவ்வளவுதான்!

உடனே அந்த பக்காத்திருடன் என்ன செய். தான் தெரியுமா? அவன் அடியேன் கால்களில் நெடுஞ் சாண் கிடையாக விழுந்தான். கண்ண்ர் வழிந்தோடிய கண்ணைத் துடைத்துக் கொள்ளாமல் விம்மினான்: “ஐயோ! இந்த உண்மையை நான் இது வரை புரிஞ்சுக்கவே இல்லை. யாரும் எனக்குச் சொல்லிக் கொடுக்கவும் இல்லையே? இனி திருடவேமாட்டேன்” என்று என்மேல் ஆணை வைத்தான். கன்னக் கோலை ஒடித்து என் முன்னால் தரையில் போட்டான். பிறகு எடுத்தான் ஓட்டம்!

ஒன்பதாவது அதிசயமாகத் தோன்றுகிறதா உங்களுக்கு?

சரி. பத்தாவது அதிசயத்தையும் தேடுங்கள்.

நான் யாரென்று உங்களுக்குப் புரிகிறதா? கண்டுபிடியுங்களேன்!