பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பூவை எஸ். ஆறுமுகம்

“அப்பா, நம் டிஸ்பென்சரிக்கு வருகிற நோயாளிகள் எல்லாரும் உங்க கோபத்துக்குப் பயந்துதான் வரலையாம்!” என்று சமயம் பார்த்துத் தெரிவித்தாள் சிறுமி.

“எப்படி அம்மா இந்த விஷயம் உனக்குத் தெரியும்?”

“அவங்க சொன்னாங்க!

“ஓ! அப்படியா? சரி இனிமேல் அவர்களை எப்படியம்மா டிஸ்பென்சரிக்கு திரும்பி வர வழைப்பது? வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற ஆரம்பிச்சிருப்பாங்களே?”

“அவர்கள் மீண்டும் நம் ஆஸ்பத்திரிக்குத்தான் வருவார்கள். அதற்கு நான் பொறுப்பாக்கும்” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினாள் பூங்கோதை.

“எப்படியம்மா இவ்வளவு தைரியமாகச் சொல்கிறாய்?” என்று கேட்டார் டாக்டர்.

“என் அன்புக்காக அந்த நோயாளிகள் மீண்டும் இங்கு வருவார்கள், அப்பா” என்று கூறிச் சிரித்தாள் பூங்கோதை.

அடுத்த சில நிமிடத்தில் டாக்டரின் வீட்டு வாசலில் வாடிக்கை நோயாளிகள் பலர் வந்து கூடிவிட்டார்கள். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.