பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிச்சந்திரன் நெ: 2

எங்களுர்ப் பகுதியிலே ‘கோமாவரம் கருப்பையா’, என்றால், அழுதபிள்ளை வாய் மூடும்; அழாதபிள்ளை அழத்தொடங்கும்! அவ்வளவு பயம் அவனென்றால்! சின்னப் பிள்ளைக்குக்கூட அவனைத் தெரியும்; அதாவது, அவன் பெயர் தெரியும். இப்படிப்பட்ட மகத்துவம் பூண்ட அவன் யாரென்று தெரிந்தால் உங்களுக்கும்கூடஅஸ்தியில் ஜூரம் வந்து விடுமே!

அவன் ஒரு திருடன். கன்னக்கோல் வைப்பதில் கை தேர்ந்தவன்; அதாவது, அவனுடைய கை தேர்ந்திருந்தது. யாரிடம் சிட்சை பெற்றானோ?

தெரியவில்லை.

தெரிந்தால், அந்த வாத்தியாரிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ளப் பிரியப்படுகிறேனோவென்று சந்தேகப் படுகிறீர்களோ?

தயவுசெய்து அப்படியெல்லாம் நினைத்து விடக் கூடாது.