பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

புத்தகங்களில் சில கருத்துக்களே விரிவாக விளக்கியிருக்கிறேன். ஆதலால் இதில் அக்கருத்துக்கள் வரும் இடங்களில் விரிவாக எழுதவில்லே.

அருளநுபவம் பெற்றவர்களுடைய வாக்குக்கும் புலமை யாற்றலால் பாடுவோர் வாக்குக்கும் வேறுபாடு உண்டு. இறைவ னுடைய அருளினல் விளைந்த இன்பத்தை நினைக்கும்போது அன் பர்களுக்கு வியப்பும் பெருமிதமும் கொந்தளிக்கின்றன. அப்போது பாட்டு எழுகிறது. பக்தி உணர்ச்சி மிகுதியாக இருந்தால் சொல்லுகிற விஷயம் அடைவாக இராது; காரண காரியத் தொடர்பு காண்பது அரிது; ஒரே அநுபவ அதிசயமாக இருக்கும். ஆயினும் அதனூடே அருளின் இழை ஒடும்; அநுபவம் சுருதி போடும். புலமை மிக்கவர் வாக்கிலே பூத் தொடுத்தாற் போன்ற தொடர்பு இருக்கலாம்; இலக்கண ஒழுங்கு பிறழாத அமைதி இருக்கலாம்; கற்பனை வளம் இருக்கலாம். ஆனல் அநுபவ முதிர்ச்சியில்ை அமையும் ஒளியை அவற்றில் இத்தனை சிறப்பாகக் காண இயலாது. அவற்றைப் படிக்கும்போது இலக்கிய இன் பத்தை நுகர்கிருேம். இவற்றைப் படிக்கும்போதோ அருளது.பவச் சோலேயின் கிழவிலே உள்ளமும் உயிரும் குளிர்வதுபோன்ற உணர்ச்சி உண்டாகிறது. பாட்டைப் படித்த பிறகு பாடியவரை நினேக்கச் செய்யும் பாடல்கள் அவை; இப்பாடல்களிலோ பாட்டின் பொருளாகிய ஒன்றில் புகுகிருேம். நமக்குத் தெளிவுபடாமல் இருந் தாலும் இன்னதென்று சொல்ல இயலாத ஒருவகைப் பிரமை உண்டாகிறது. சிறிதே பக்தியுணர்வும் கலந்துவிட்டால் இன்ப அநுபவத்தின் லேசம் எங்கோ தொலை தூரத்தில் கண் சிமிட்டுவது போல இருப்பதைக் காணலாம்.

இந்த நாட்டுப் பக்திப் பாட ல்களின் சிறப்பு இது. தமிழர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்க . உள்ளத்தைக் கணிய வைக்கும் இத்தகைய பாடல்களே அவ கள் பெற்றதுபோல் வேறு யார் பெற்றிருக்கிரு.ர்கள்?

மயிலாப்பூர்

1-8-55 கி. வா. ஜகந்நாதன்

கல்யாண நகர் }