பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு

திருவிசைப்பாவில் முதல்நூல் திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா. திருமாளிகைத் தேவர், கோயிலாகிய சிதம் பரத்தைப் பற்றியே நான்கு பதிகங்கள் பாடியிருக்கிருர். முதல் மூன்றும் பஞ்சமப் பண்ணிலும் நான்காவது காங் தாரப் பண்ணிலும் அமைந்தது.

‘or

இறைவன காம் பாடிப் பணிந்து போற்ற முயல் கிருேம். நம்முடைய உடம்பு, உரை, உள்ளம் ஆகிய கரணங்கள் குறைபாடுடையவை. இறைவனே பரிபூர ணன்; நிறைவை உடையவன். அவன் புகழைப் பேசுவதற் கும் சினேப்பதற்கும் அவனேப் பணிவதற்கும் குறைபா டுடைய கம் கரணங்களுக்கு ஆற்றல் இல்லை. என்ருலும் அவனுடைய திருவருள் இருந்தால் ஒருவாறு போற்றலாம்.

அவன் அருள் வழிகாட்டாவிட்டால் அவனைப் பக்தி பண்ணும் பாக்கியம் நமக்குக் கிட்டாது. மாணிக்கவாசகர், " அவனருளாலே அவன்தாள் வணங்கி ' என்று சொல் கிறார். அவன் அருளைப் பெறவேண்டும் என்ற ஆசையால் தான் அவனே வணங்குகிருேம். அப்படி வணங்குவதற்கும் அவன் அருள் வேண்டியிருக்கிறது. சில தண்ணிர்க் குழாய் களில் அடித்தால் தண்ணிர் வராது. சிறிதளவு தண்ணிரை அதில் விட்டு அடித்தால் கிறையத் தண்ணிர் வரும். அது போல இறைவனே வணங்கவே முதலில் அவன் திருவருள் செய்யவேண்டும். அப்படி வணங்கினல் அவனுடைய பேரருளைப் பெறலாம்.