பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஒளிவளர் விளக்கு

திருமாளிகைத் தேவர் முதல் பதிகத்தில் இறைவனே வேண்டிக்கொள்கிருர். " சிதம்பரத்தில் ஒளி மயமாக எழுந்தருளியிருக்கின்ற பெருமானே ! உன்னைப் பணிந்து, பாடி ஆடிப் போற்றவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் உனக்குத் தொண்டன். உன் திருவருள் நான் இப்படிச் செய்யவேண்டு மென்று காட்டாவிட்டால் நான் என்ன செய்வேன்! நான் உன்னே எப்படி விளம்ப வேண்டுமென்பதை தோன் விளம்பவேண்டும். எப்படிப் பணியவேண்டும் என்பதைப் பணிக்கவேண்டும். எப்படிக் கருதவேண்டுமோ அப்படி கான் கருதும்படி நீ உன் திரு வுள்ளத்தில் கருதவேண்டும். உன் புகழை உரைக்கு மாற்றை உரைக்கவேண்டும். உன்னே கணுகும்படியாக ே என்னே நணுகவேண்டும். இசையுமாறு இசைத்து, நுகரும் படி துகர்ந்து, புணரும்படி புணர்ந்து, தொடரும்படி தொடர்ந்து, விரும்புமாறு விரும்பி, கினேயும்படி நினைக் தருள வேண்டும் ' என்று பதினெரு பாடல்களால் விண் ணப்பம் செய்கிரு.ர்.

" நாம் பக்தி பண்ணினுேம் பாடினுேம் : அர்ச்சனே செய்தோம்; அதனல் ஆண்டவன் அருள் செய்தான்' என்று கினேப்பது அகங்காாம். ஆண்டவன் திருவுள்ளம் வைத்து நம்மையும் தன் அடியைப் பாடச் செய்தான்; பணியச் செய்தான்' என்று கினேப்பதே உண்மை அன்பர்களுக்கு இலக்கணம்.

சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானத் திருமாளிகைத் தேவர் எவ்வளவு அழகாகப் போற்று கிருர்! நாம் இருட்டில் தடுமாறுகிறவர்களைப் போல் இருக் கிருேம். "இருள் தருமா ஞாலம்' என்றும், 'மாயிருள் ஞாலம்" என்றும் இவ்வுலகத்தைப் பெரியோர்கள் சொல்