பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 3.

கிருர்கள். அறியாமையென்னும் இருள் சிரம்பியது இவ் வுலகம்.

கண் இருந்தாலும் இருட்டறையில் புகுந்தால் பொருள்களின் உருவம் நமக்குத் தெரிவதில்லே. கையால் தடவிப் பார்த்து எப்படி எப்படியோ கினேக்கிருேம். அந்த அந்தப் பொருளின் உருவம் தெரியாமல் திகைக்கிருேம். அப்படியே ஞானம் இன்மையால் பொருளின் தன்மை உள்ளபடி நமக்குத் தெரிவதில்லை.

" எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு ’’

என்று திருவள்ளுவர் சொல்கிருர் எந்தப் பொருள் எப் படி இருந்தாலும், புறக்கண்ணுக்கு எவ்வாறு தோற்றி லுைம், அதனுடைய உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்ப்பதுதான் அறிவு அல்லது ஞானம். நமக்கு ஞானம் இல்லாமையால் ஒன்றை மற்ருென் ருக எண்ணித் தடுமாறு கிருேம். கிலேயற்ற பொருள்களே யெல்லாம் நெடுங்காலம் சதமென்றும், பயனற்ற பொருள்களைப் பயன் உள்ளவை என்றும் எண்ணி ஏமாந்து போகிருேம். இருட்டறையில் இருப்பவன் கிலேயும் அதுதானே ? அவனுக்குக் கண் இருந்தாலும் பயன்படுவதில்லை. ஒருவிளக்குக் கிடைத்தால் அதைக் கொண்டு பொருள்களின் உருவத்தைக் கண்டு கொள்ளலாம்.

மனிதனுக்கு ஞானம் இருக்கிறது; அகக்கண் இருக் கிறது. ஆனல் அது பயன்படவில்லை. புறக்கண் இருங் தும் இருளில் பயன்படாதபோது விளக்கு அந்தக் கண் அணப் பயன்படும்படி செய்வதுபோல அகக்கண் பயன்பட வும் ஓர் அகவிளக்கு வேண்டும். மாயாந்தக ரத்திலே சிக்கி உழலும் மனிதனுக்குப் பொருள்களின் உண்மை எப்படி விளங்கும்? மாயை இருளேப்போக்கி ஞானக் கண்ணேப் பயன்படும்படி செய்ய இறைவனது அருள் விளக்கு வேண்