பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 5

காலத்தில் அவை இருந்தன ; கம் காலத்திலும் இருக் கின்றன ; நமக்குப் பின்பும் அவை இருக்கும். மலைகள் அத்தகையவை; ஆறுகள் நெடுங்காலமாக ஓடுபவை; கடல் களும் பல காலமாக இருப்பவை. ஆனல் பூமியின் வர லாற்றை விஞ்ஞான முறையில் ஆராய்ந்த விஞ்ஞானிகள் பல மலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றின என்று சொல்கிருர்கள். பல மலைகள் பூமிக் குள் அழுந்திப் போயினவாம். இப்போதுள்ள மலைகளும் இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாதாம். ஆறு களும் கடல்களுங்கூட அப்படி உள்ளவைகளே என்று விஞ்ஞானிகள் சொல்கிருர்கள். அப்படியானல் அவை அழியக்கூடியவைகளே என்று திட்டமாகச் சொல்லலாம். மலே, ஆறு, கடல் இவற்றைத் தன்பால் கொண்ட பூமியும் ஒரு காலத்தில் அழிவதுதான். சூரியன் முதலிய கிரகங் களும் அழிவனவே. இப்படி எல்லாவற்றின் ஜாதகத்தை யும் பார்த்துக்கொண்டே போனல் ஒன்ருவது அழியாமல் கிலேத்து இருப்பதாகத் தெரியவில்லை. உயிரும் பல உடம்பு களிற் புகுந்து புகுந்து புறப்படுகிறது. ஒன்றே ஒன்றுதான் அழிவு இன்றி கிலேத்து கிற்பது. அதுவே பரம்பொருள்.

அழிவு இல்லாத பொருள் ஒன்று தான். அந்த ஒன்றே கடவுள். அவன் உலப்பிலாதவன். அவனைப் போல உலப்பிலாத பொருள் வேறு ஒன்றும் இல்லை.

உலப்பு இலா ஒன்றே ! (உலப்பு - அழிவு.)

AÉ.

இறைவன் ஒளிவளர் விளக்காக இருக்கிருன்: உலப் பிலா ஒன்ருக இருக்கிருன். அவனே உணர்பவர்கள் யார்? அவன் உணரப்படும் பொருள்தான?

ஆம்! அவன் உணரப்படும் பொருளாக இருப்பவனே. ஆனல் அவனே உணரும் உணர்வு மற்ற உணர்வைப்