பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 9

வளர்கின்ற உள்ளத்திலே ஆனந்தப் பழமாக, இன்பப் பெருங் கனியாக கிற்கிறவன் எம்பெருமான்.

மற்றவர்கள் உள்ளத்தில் இலைமறை காய் போல் இருக்கும் இறைவன், அன்பு வளர்கின்ற உள்ளத்தில் அருள் பழுத்து கிற்கிருன், அன்பினல் அருளே வாங்க வேண்டும். 'அருள் என்னும் அன்பீன் குழவி' என்று வள்ளுவர் கூறுகிருர். மறைவிலே காய் இருந்தாலும் அது பழுத்துவிட்டால் அதன் மணம் பரவத் தொடங்கும். அதல்ை பழம் இருப்பது தெரியும். அது பழுப்பதற்குரிய சூழ்நிலை அன்பினால் உண்டாகும்.

அளிவளர் உள்ளத்து . ஆனந்தக் கனியே ! (அளி - அன்பு.)

சச்சிதானந்தப் பரம்பொருளாய், குணங்குறியிலாத வஸ்துவாய், பக்தர்கள் சித்தத்தில் தித்திக்கும் தேனய் இருக்கின்றவன் யாவரும் காணச் சிதம்பரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் வெளிப்படையாக கடனம் செய்யும் திருக் கோலத்தைக் காட்டுகிருன். மனவாக்குக் கடந்த பொரு ளாக இருந்தாலும் ஆருயிர்களிடம் உள்ள கருணையால் உருவத் திருமேனி கொண்டு காட்சி அளிக்கிருன். பெரி யோர்களுக்குக் காட்சியருள, அவர்கள் அந்த உருவங்களே ஏனேயோரும் கண்டு உய்யும்படி அங்கங்கே நிறுவிப் பூசனை புரிந்து சென்ருர்கள். அப்படி உள்ள தலங்களில் சிறங் தது திருத்தில்லை. கோயில்களில் எல்லாம் சிறந்ததாத லின் அதைக் கோயில் என்றே வழங்குகிருர்கள்.

அங்குள்ள அம்பலத்தை ஆடும் இடமாகக்கொண்டு இறைவன் திருநடனக் காட்சி அளிக்கிருன். மனிதனும் இயங்குகிருன். தெய்வமும் இயங்குகிறது. ஆனல் மனி

தன் தானுக இயங்குவதில்லை. இறைவன் இயக்குவதகுல்

ஒ.வி-2