பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பகக் கணி

கனிகளில் பலவகை உள்ளன. கன்முகப் பழுத்த தேங் காயைத் தெங்கம்பழம் என்று சொல்வது உண்டு. ஆனல் அந்தப் பழத்தின் மட்டையை உரித்து உடைத்து ஒட்டை எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் தேங்காயை உண்ண வேண்டும். அவ்வளவு சிரமப்பட்டு உண்ண வேண்டி யிருப்பதனால் அது என்றும் காயாகவே இருக்கிறது; எவ் வளவு பழுத்தாலும் தேங்காய் என்றுதான் சொல்கிருேம்.

பலாப்பழம் ஒரு வகை. அது கன்ருகப் பழுத்தால் கம் மென்று மணம் வீசுகிறது. ஆனல் அதையும் எளிதில் பறித்து உண்ண முடியாது. மேலே உள்ள முள்ளே நீக்கி உள்ளே இருக்கும் சடையை நீக்கிச் சுளேயை எடுக்க வேண்டும். சுளேக்குள் இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு உண்ண வேண்டும். சுளேயை எடுத்தவுடன் அதைக் கடித்தால் உள்ளே இருக்கும் கொட்டை துவர்க்கும்.

மாம்பழம் இத்தனே வேலை வாங்காது. வேண்டு மால்ை தோலைச் சிவலாம்; பழத்தைச் சாப்பிட்டு விட்டுக் கொட்டையை எறிந்துவிடலாம். வாழைப்பழம் மிக எளிது. தோலே உரித்து விட்டுச் சாப்பிடலாம். திராட் சைப் பழத்துக்கு அதுகூட வேண்டாம்; அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடலாம். விதையை மட்டும் உமிழ்ந்துவிட வேண்டும். விதையில்லாத காபூல் திராட்சையை அப்படியே ஒரு தடையும் இன்றிக் கடித்து விழுங்கி விடலாம். தோலும் விதையும் தடை செய் யாமல் இருக்கும் பழமே விழுங்கக் கூடிய பழம்.