பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பகக் கனி 15

பெருவாழ்வைப் பெறும்படியும் அமைகின்ற கல்வியே கல்வி. அந்தக் கல்வி கற்றவர்கள் இறைவனுடைய திருவடிக்கண்ணே இடையீடில்லாத அன்புடன் இருப் பார்கள். அவர்கள் கற்பகக் கனியைப் போன்ற இறை வனது அநுபவத்தைப் பெறுவார்கள்.

இறைவனிடத்தில் அவர்களுக்குள்ள காதல் தடுப்ப தற்கரியது. எம்பெருமாளுகிய கனியைக் கடித்துண்ணும் பொறுமை அவர்களுக்கு இல்லை. அப்படியே விழுங்கி விடுவார்கள்.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை.

கற்றவர்கள் விழுங்கும்படியாகக் கனிந்து சுவையுடன் இருக்கும் கனி அது. அன்பர்கள் விழுங்கும் ஆவலுடன் இருக்கிருர்கள். அவர்களால் விழுங்கப்படும் ஆவலோடு இருக்கிருன் இறைவன். எல்லாப் பொருளேயும் தான் விழுங்கித் தனக்குள் வைத்திருக்கும் இறைவன் அன்பர்க ளால் விழுங்கப்பெற்று அவர்களுக்குள்ளே அடங்கி விற்கிருன். -

கற்றவர் மாத்திரம் விழுங்கிச் சுவைக்கும் கற்பகக் கனி இறைவன் என்ருல், மற்றவர்கள் அந்த எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடுவது ஏன்? இறைவன் யாவருக்கும் கருணை புரிகிறவன். அவர் அவர்களுடைய பக் குவத்துக்கு ஏற்ப அருளறுபவத்தை வழங்குகிறவன். கற்ற வர்கள் விழுங்கும்படி தன்சீனத் தந்தாலும் அவர்களளவில் அவன் கருணை நிற்பதில்லை. அவன் கருணே ஒன்றுக்கும் பற்ருதவர்களையும் ஈர்த்து ஆட்கொள்ளும் வேகத்தை உடையது. அதற்கு எல்லேயே இல்லை. கற்றவருக்குக் கையில் எடுத்து விழுங்கும் கனியைப்போல எளியவகை இருந்தாலும் அவன் எல்லேயில்லாத கடலைப்போன்றவன்;