பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பகக் கணி 17

சத்தைக் கோயிலாகக் கொள்பவன். அவனை மதித்து வழிபடும் அன்பர்கள் பிற பொருளே மதிப்பதில்லை. மதிப் புள்ள பொருள் பரம் பொருளாகிய இறைவன் ஒருவன் தான். தன்னை மதிப்பவர் மனத்தில் இறைவன் மணிவிளக்காக ஒளிவிடுகிருன். மணி விளக்குக்கு எண்ணெயும் திரியும் வேண்டாம்; அது கந்தா விளக் காக விளங்குகிறது. அது தன்னேயும் காட்டி மற்றப் பொருள்களையும் தன் ஒளியினுற் காட்டுகிறது. மதிப்பவர் மனத்தில் மணி விளக்காக இறைவன் ஒளிரும்போது அவர் களுடைய காட்சியே வேறுபடுகிறது. அவர்களுடைய அதுபவமே தனியாக அமைகிறது. விளக்கு வைத்த வீட்டுக்கும் விளக்கு வைக்காத வீட்டுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? அப்படியே மதிப்பவர் கிலேயும் மற்றவர் கிலேயும் இருக்கும்.

மதிப்பவர் மனமணி விளக்கை.

இறைவன் கற்றவருக்கு இன்பப் பொருளாக இருக் கிருன். கரையற்ற கருணைக் கடலாக இருக்கிருன். மற்றவர் அறியாத மாணிக்கப் பெருமலேயாக கிற்கிருன். மதிப்பவர் மனத்துக்குள் மணி விளக்காக ஒளிர்கிருன்.

இறைவன் கருணையாளன்; தன் அன்பர்களுக்கு அருள் பவன். அதோடு அவன் பேராற்றல் உடையவன். அவ னிடம் விக்கிரக சக்தியும் அதுக்கிரக சக்தியும் உள்ளன. கல்லவருக்கு அருள் புரிந்து கருணை காட்டலும், அல்லாத வருக்கு மறக் கருணையால் வீரம் காட்டலும் அவனுக்கு இயல்பு. உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் துன் பத்தை விளைவித்து வந்த முப்புரத் தல்வர்களின் வலியை அவன் அடக்கினன். அவர்கள் பொன், வெள்ளி, இரும்பு