பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பகக் கணி 19

பொறிகளில் அந்தத் தண்மையின் விளைவு சாரும்: உரையும் பார்வையும் தண்ணென்றிருக்கும்.

திருவிழிமிழலையில் வீற்றிருக்கும் உலக நாயகனுகிய இறைவனைத் தரிசித்தபோது சேந்தனருக்கு முதலில் உள்ளம் குளிர்ந்தது; பிறகு கண்கள் குளிர்ந்தன.

திருவீழி மிழலேவிற் விருத்த கொற்றவன் தன்னக் கண்டுகண்டு உள்ளம்

குளிரான் கண் குளிர்ந் தனவே.

சோழ நாட்டில் உள்ள திருப்பதி திருவிழி மிழலை. அப்பரும் ஞானசம்பந்தரும் ஒரு பஞ்சகாலத்தில் இறைவ னருளால் படிக்காசு பெற்ற தலம். இறைவன் திருமணக் கோலம் காட்டிய இடம் இது. அவன் உமாதேவியுடன் வேறு யாருக்கும் இல்லாத பெருமையோடு வீற்றிருக் கிருன் வீழி என்பது ஒரு செடி. அது கிறைந்த இட மாதலின் விழிமிழலை என்ற பெயர் வந்தது. இக்கோயிலில் உள்ள விமானம் விண்ணிழி விமானம் என்று வழங்கும். திருமால் விண்ணுலகத்திலிருந்து கொணர்ந்து அமைத்த தாகச் சொல்வார்கள்.

திருமால் தம் கண்ணேப் பறித்து இறைவன் திருவடி யில் அருச்சித்துச் சக்கரம் பெற்ற இடம் இது என்பர். இறைவன் திருகாமம் நேத்திரார்ப்பனேசுவரர் என்றும் விழியழகர் என்றும் வழங்கும். சுந்தர குசாம்பிகை என்பது அம்பிகையின் திருநாமம். மூவரும் பாடிய தேவாரப் பதிகங்களே உடையது.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கணியைக் கரைஇலாக் கருணைமா கடலே மற்றவர் அறியா மாணிக்க மலேயை மதிப்பவர் மனமணி விளக்கைச்