பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன்மேற் காதல்

தாய் : இது என்ன? உன் கையில் இருந்த வளைகளெல் லாம் எங்கே? மொட்டைக் கையோடு நிற்கிருயே! அழகாக இருக்கிறதா? என்ன பைத்தியக்காரத்தனம் இது? மகள் : அவற்றை ஒருவன் வவ்விக்கொண்டான். தாய் : என்ன! உன் வளைகளை ஒருவன் வவ்வுவதாவது!

ஆண்மகனுக்கு வளைகள் எதற்கு? மகள் : அவன் எனக்கு ஒன்றைத் தந்து வளையை வவ்விக்

கொண்டான். தாய் : என்ன சொல்லுகிருய் சற்றே விளங்கும்படி

சொல்.

மகள் : அவன் என் மனத்தையே மாற்றிவிட்டான். அவனிடம் காதல் கொண்ட மனத்தை எனக்குத் தந்து, என் கையிலிருந்த சங்கு வளையல்களைக் கழலச் செய்து விட்டான். -

தாய்க்கு இப்போது உண்மை விளங்கியது. யாரோ ஒரு காதலனிடம் தன் மகள் மனத்தைப் பறிகொடுத்து விட்டு, அவனுடைய பிரிவினல் உடல் நலிந்து வளைகள் நழுவ கிற்கிருள் என்பதைத் தெரிந்துகொண்டாள். அவள் யாரிடம் காதல் கொண்டாள்? அவளுக்கும் தம் குலத்துக் கும் அவன் ஏற்றவன?-இப்படிப் பல கேள்விகள் அவள் உள்ளத்தே எழுகின்றன. தாய் : யார் அவன்? யாருடைய பிள்ளே?

மகள் : மலேமகள் மதகில ; பார்வதி தேவியின் குமரன்.