பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து வைக்கிறவன்

திருக்கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கிறது அந் தக் கூட்டம். இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லித் துதித்துக்கொண்டே போகின்ருர்கள் அடியார்கள். அவர் கள் போகும்பொழுதே அவர்களுடைய ஆரவாரம் நெடுங் தூரத்தில் உள்ளவர்களுடைய காதிலும் விழுகிறது. அப்படிப் போகின்றவர்களைக் கண்டு சிலர் எழுந்து கிற்கி ருர்கள். சிலர் கைகுவிக்கிருர்க்ள். சிலர் அந்தக் கூட்டத் துக்கு அருகே சென்று பார்க்கிருர்கள். வேறு சிலர் அந்தக் கூட்டத்துடன் சிறிது துாரம் செல்கிருர்கள். -

இவர்களுடன் சேராமல் நாலு பேர் எங்கோ ஒரு திண்ணையில் உட்கார்ந்து வம்பு அளந்து கொண்டிருக்கி ருர்கள். அவர்கள் காதில் அடியவர்களின் வாழ்த்தொலி விழுகிறது. இந்த நாலு பேர்களுக்கும் அந்த அடியவர்கள் சோம்பேறிகளாகத் தோன்று கிருர்கள். அவருள் ஒருவர், 'யார் இப்படிக் காட்டுக் கத்தலாகக் கத்துகிருர்கள்?" என்று கேட்கிருர்.

"அந்தப் பைத்தியங்கள் தாம்!” என்று ஒருவர் சொல்லிச் சிரிக்கிருர்,

"இவர்களுக்கெல்லாம் வேறு வேலே இல்லையோ? வீடு, குடும்பம் என்று ஒன்றும் இல்லையோ?” என்கிருர் ஒருவர்.

“அவையெல்லாம் இருந்தால் இப்படி ஏன் பொறுப்பு

இல்லாமல் வீதியென்றும் நினைக்காமல் வெட்கம் இன்றிக்

கத்திக்கொண்டு போகிருர்கள்? எல்லோரும் சோம்பேறி

கள். சாப்பிட்ட சோறு செரிக்கவேண்டும் அல்லவா?

$