பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒளிவளர் விளக்கு

அதற்காக இந்த அற்புதமான வழியைக் கண்டுபிடித்திருக் கிருர்கள்!' -

இந்த வம்பர் மகா சபைப் பிரமுகர்கள் தாம் மிகவும் பொறுப்பான வேலை செய்வதாக எண்ணிக்கொண்டிருக் கிரு.ர்கள். என்ன வேலை தெரியுமோ? நல்லவர்களைப் பற்றி வம்பு பேசி அவர்களைப் பைத்தியமென்றும் சோம்பேறி யென்றும் சொல்லிப் பரிகாசம் செய்யும் வேலை!

தினந்தோறும் அடியார்கள் கூடிக்கொண்டு கோயி லுக்குச் செல்வதும், அப்படிச் செல்லும்போது இறைவன் திருநாம முழக்கம் செய்துகொண்டு போவதும், பாடிக் கொண்டு போவதும் வெவ்வேறு மக்களுடைய உள்ளத்தில் வெவ்வேறு வகை உணர்ச்சியை உண்டாக்குகின்றன. மேலே சொன்ன வம்பர் சபையில் பரிகாச உணர்ச்சியே. உண்டாயிற்று.

அந்த நாலு பேரில் ஒருவருக்குச் சிறிதே யோசனை தோன்றியது. ஒரு நாளைப் போலவே குறிப்பிட்ட நேரத் தில் இப்படி முழங்கிக்கொண்டு போகிருர்களே. உண்பதும் உறங்குவதுமாகிய காரியங்களே நமக்குச் சிறந்தன வாக இருக்கின்றன. அந்த இரண்டையுங்கூட வரை யறையாக, உரிய காலத்தில் நாம் செய்வதில்லையே! அப்படி யிருக்க இவர்கள் நாள் தவருமல் கூட்டமாகச் செல்கிருர் களே! நம்மைப் போன்றவர்கள் பரிகாசம் செய்வார்கள்என் பதை இவர்கள் அறியமாட்டார்களா? முதலில் தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் நாளடைவில் தெரிந்துகொள்ள மாட்டார்களா?' என்ற சிந்தனே பிறந்தது அவருக்கு.

"இதில் எதோ ஒர் இரகசியம் இருக்கவேண்டும். இவ் வளவு சிரத்தையாக இவர்கள் இப்படிச் செய்வதில் ஏதோ லாபம் இல்லாமலா இருக்கும்?' 'ன்ன்று அடுத்தபடி யோசனை படர்ந்தது. அவர்களைச் சற்று நெருங்கிக்