பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஒளிவளர் விளக்கு

தார்கள். முதலில் அவர்களுடன் செல்லாமல் இருந்தவர், இப்போது அவர்களோடு சேராமல் தனியே சிறிது தூரம் போளுர். அப்படிப் போகும்போது அவர்கள் என்ன செய்கி ருர்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தார்.

அவருக்கு ஏதோ ஒரு புதிய உலகத்தைக் கண்டது போல் இருந்தது. அடியார்கள் இறைவனிடம் எவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிருர்கள் என்பதை அவரால் ஓரளவு உணர முடிந்தது. அன்பு வைத்த இடத்தில் மனிதனுக்கு எத்தனை ஆர்வம் பிறக்கிறது என்பதை அவர் வேறு வகை அநுபவத்தால் உணர்ந்தவர் அல்லவா?

இறைவன் திருநாமத்தைச் சொல்லும்போதே சிலருக் குக் கண்ணில் நீர் சுரந்தது. "என்ன இது-ேஅவருக்கு விளங்கவில்லை. தன்னுடைய மகள் நெடுநாள் கருவுரு மல் பிறகு கருவுற்று வீட்டுக்கு வரும்போது அன்னே வரவேற்கிருள். அவள் கண்ணில் நீர் அரும்புகிறது. இதை அவர் பார்த்திருக்கிருர். காணுமற் போன மகன் வந்து விட்டான் என்றவுடன் அன்புடைத் தந்தைக்குக் கண்ணிர் சுரக்கிறது. இதையும் பார்த்திருக்கிருர். இங்கே இவர்கள் கண் பனி அரும்புகிறதே! யாரைக் கண்டு இப்படிக் கண்ணிர் விடும்படியான உணர்ச்சி எழுகிறது?

இறைவனைக் காணச் செல்வதனால் உண்டாகும் உணர்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். தாய் மகளைக் காணும்போதும் தந்தை மகனேக் காணும்போதும் உண் டாகும் உணர்ச்சியைப் போல இந்த உணர்ச்சியும் இருக் கும்போல் இருக்கிறது' என்று அவர் ஆராய்ந்து ஆராய்ந்து உண்மை காணுகிருர், "ஓ! இதுதான் கடவுளிடம் உள்ள அன்புக்கு அடையாளம் போலும்' என்று கினைக்கிரு.ர்.

அன்பர்கள் தம்மையறியாமலே கையைக் குவிக்கிருர் கள். கண்ணே மூடிக்கொண்டு பாடுகிரு.ர்கள். கண்ணைத்