பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து வைக்கிறவன் 29.

திறந்து கெடுந்துாரத்தில் தோன்றும் கோபுரத்தைப் பார்க் கிருர்கள். கண்ணில் அருவி போல நீர் பொழிகிறது.

வம்பர் சபையிலிருந்து பிரிந்து வந்தவர் இவற்றை யெல்லாம் உற்றுப் பார்க்கிருர். ஒவ்வொரு சிகழ்ச்சியிலும் அவர் கருத்து ஊன்றுகிறது. முன்பெல்லாம் இழிவாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் எண்ணிய கிலே அடியோடு மாறிவிட்டது. பெறுவதற்கரிய பெரிய பேற்றைப் பெற்ற வர்கள் அவர்கள் என்ற எண்ணம் இப்போது அவருக்கு உண்டாகிவிட்டது. அந்தக் கூட்டத்துக்குப் புறம்பே கின்று ஆராய்ந்தவர் நாளடைவில் அந்தக் கூட்டத்தோடு ஒன்றி நடக்கத் தலைப்பட்டார். அவருடைய கைகளும் குவிந்தன. அடியவர்கள் இறைவன் திருக்கோயிலை அணு கும்போது இடும் "ஹர ஹர மகாதேவ' என்ற ஆரவாரத் தில் அவருடைய குரலும் கலந்தது. அவரும் "ஹர ஹர மகாதேவ' என்று சொல்லத்தொடங்கிவிட்டார். அப்படிச் சொல்லாவிட்டால் தொண்டையடைத்து ஏதோ வேதனை உண்டாவதுபோலத் தோன்றியது. தொண்டர் கூட்டத் தோடு "ஹர ஹர மகாதேவ' போட்டுவிட்டால் அவர் இருதயத்தில் நெடுநாளாக அடைந்து கிடந்த சுமை குறைந்தது போல இருந்தது.

இறைவன் சங்கிதானத்துக்கே போய்விட்டார். அங்கே தான் அந்த அடியவர்கள் எப்படி அலறுகிருர்கள்! “என் துன்பமெலாம் திர்க்கும் பெருமானே' என்று ஒருவர் கதறுகிரு.ர். 'என் பிறவி நோய்க்கு மருந்தே' என்று ஒருவர் அரற்றுகிருர். 'என் தோன்ருத் துணையே' என்று ஒருவர் புலம்புகிருர், 'என் களைகனே!' என்று ஒருவர் ஒலமிடுகிருர், இப்படியாக அவர்கள் இடும் ஒலத்தினூடே புதிய அன்பரும் தம்மை அறியாமலே கண்ணிர் வார ஏதேதோ அரற்றத் தொடங்குகிருர். அன்பர்கள் பாகாய் உருகுகிருர்கள். உடம்பு குழைந்து குழைந்து ஒசிய, உரை