பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஒளிவளர் விளக்கு

மணமாக மணக்கின்றன. மலர்களில் மணம் மாத்திரமா இருக்கும்? தேனும் இருக்கிறது. பனி மலர்ச் சோலை சூழ்ந்த ஊர் பெரும்பற்றப்புலியூர். நடராசப் பெருமா ளுகிய தேனே நுகர அடியார்கள் பல இடங்களிலிருந்து வருவதுபோல, இந்தச் சோலையில் மலர்களிலுள்ள தேனே அருந்த வண்டுகள் வருகின்றன. நல்ல தேன் இங்கே கிடைக்கும் என்று தெரிந்து வருகின்றன. வந்து ஆனந்த மாக மலர்களில் புகுந்து தேனே கிறைய உண்ணுகின்றன. உண்டு இசை பாடுகின்றன. ஒரு மலரிலிருந்து மற்ருெரு மலருக்குத் தாவுகின்றன. இயற்கையின் எழில் நலங்களைக் கண்டு களிக்கும் இயல்புடையவர்கள் அந்தச் சோலைக்கு வருகிரு.ர்கள். அவர்கள் இந்த வண்டுகளைக் கவனிக்கிருர் கள். அவை பாடுகின்றன: ஆடுகின்றன. அவற்றின் முரற் சியிலே ஈடுபடுகிருர்கள். "இதோ இது விளரிப் பண்ணேப் போல இருக்கிறது' என்கிருர் ஒருவர். சிறிது நேரம் சென்ற பின், "இப்போது காந்தாரப் பண்ணை அல்லவா கேட்கிருேம்?” என்கிருர் ஒருவர். இப்படிப் பலவகையான பண்களை சினைத்து ஒப்புநோக்கும்படி அவை முரல்கின்றன.

இத்தகைய சோலைகள் அடர்ந்து வளர்ந்து திகழ்கின் றன. இவற்றின் வாசலில் அழகாகக் கொடி வீடு அமைத் திருக்கிருர்கள். அதில் சண்பகக் கொடி படர்ந்திருக் கிறது. கொடி முழுவதும் அரும்பு கட்டியிருக்கிறது. கண் கொள்ளாக் காட்சி !

'அன்பர் கூட்டத்தில் என்னேயும் புணர்ப்பவன் கோயில் இத்தனை வளமும் அழகும் உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலம் ' என்று பாடுகிருர் கருவூர்த் தேவர்.

கண்பனி அரும்பிக் கைகள்மொட் டித்து,' என் களைகணே ! ஒலம் !" என்று ஒலிட்டு