பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து வைக்கிறவன் 88

என்பெலாம் உருக்கும் அன்பர்தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில்,

பண்பல தெளிதேன் பாடிநின்று ஆடப் பனிமலர்ச் சோலேசூழ் மொழுப்பில்

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே.

(கண்ணில் நீர்த்துளி தோன்றக் கைகளைக் குவித்து, "என் துன்பத்தை நீக்கும் பெருமானே! ஒலம்!” என்று கதறி என்பெல் லாம் உருகும்படி நெகிழும் அன்பர்களின் கூட்டத்தில், சிறிதும் தகுதியில்லாத என்னேயும் சேர்த்து வைத்தவனுடைய கோயில், இங்கே கல்ல தேன் கிடைக்கும் என்று தெளிந்து வந்த வண்டுகள் பல பண்களைப் பாடி நின்று ஆட, குளிர்ச்சியையுடைய மலர்களைப் பெற்ற சோல்ேகள் சூழ்ந்த முகப்பில் சண்பகம் அரும்புகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள செல்வம் வளர்கின்ற திருச்சிற் நம்பலமாகும்.

தெளி - தெளிந்த; அநுபவத்தால் உறுதியாகத் தெரிந்து கொண்ட, தேன் - வண்டு. பனி - குளிர்ச்சி. மொழுப்பு - முகப்பு. திரு வளர் செல்வம் வளர்கின்ற.)

இது கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாவில் இரண்டாவது பதிகத்தின் ஐந்தாவது பாட்டு.