பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலம் உண்டவன் அழகு

தேவர்கள் அமுதம் உண்ண வேண்டும் என்ற அருளினலே இறைவன் முதலில் நஞ்சை உண்டான். தேவர்கள் அமுதம் கடைந்தபோது முதலில் மகா தேவனகிய இறைவனைத் தியானம் செய்யவேண்டு னென்று அவர்கள் எண்ணவில்லை. அவர்கள் எண்ணுமற். போனலும் எண்ணும்படியான கிலே வந்துவிட்டது. ஆலா, லம் தோன்றியபோது அது கொப்புளித்த வெம்மையைத் தாங்காமல் ஓடினர் தேவர். அதனை முதலில் ஆற்றலழியப் பண்ணிகுலன்றித் தேவர்கள் வாழவே இயலாது. எல்லோ ரும் சாவாத வாழ்வுபெற வேண்டுமென்று எண்ணியே அமு தத்தைக் கடைந்தனர். ஆனல் எல்லோரையும் ஒருங்கே அழித்தொழிக்கும் ஆலமல்லவா இப்போது தோன்றி விட்டது ? அமுதம் கிடைப்பது கிடக்கட்டும். இந்த ஆலாலம் என்னும் மரண வாயிலை அடைக்க வேண்டுமே!

இப்போதுதான் அமரர்களுக்குச் சிவபெருமானுடைய நினைவு வந்தது. அதுவரையில் அவனே மறந்திருந்த அவர்கள் இப்போது அவனே கினைந்து ஒலம் இட்டனர். " முன்பே என்னே ஏன் அழைக்கவில்லை ?’ என்று இறை வன் எண்ணவில்லை. இப்போதாவது அழைக்கிருர்களே என்று உள்ளம் உவந்தான். அவன் கருணைக் கடல் அல்லவா? அவர்கள் உயிரை வவ்வ இருந்த நஞ்சை உண் டான். அந்த கஞ்சு அவனுடைய திருக்கழுத்தில் நீலமணி போலத் தங்கிவிட்டது.

'லே மணிமிடற் ருெருவன்" (புறநானூறு) என்று கல்லிசைப் புலவர்கள் பாராட்டும்படி அது கிற்கிறது.