பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலம் உண்டவன் அழகு 35.

இந்த வரலாற்றை ஓர் அன்பர் கேட்டார். இறைவன் திருநீலகண்டத்தின் பெருமையை எண்ணி எண்ணி மகிழ்க் தார். அவனுடைய காட்சியைப் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டார் ; பக்தி பண்ணினர்; தவம் புரிந்தார்; இறை வன் திருவுருவத்தைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ருர்.

அமரர் அமுதம் பெறுவதற்காகத்தான் இறைவன் கஞ்சுண்டான் என்பதை எண்ணி எண்ணி உருகுபவராத லின், அவனுடைய திருவுருவ தரிசனம் கிட்டியபோது அவர் பார்வை முதல் முதலாக அவனது திருக்கழுத்தில் சென்றது. அதுதான் எத்தனை அழகாக இருக்கிறது! கழுத்து லே மணியைப் போல அல்லவா சுடர் வீசுகிறது ?

நீலமே கண்டம்.

இப்பெருமான் அந்த கஞ்சத்தைத் திருவாயினுல் தானே உண்டிருக்கவேண்டும்? கழுத்தை லேமாக்கிய அந்த நஞ்சு, உண்ட வாயை எப்படி ஆக்கியிருக்கிறது?’ என்று எண்ணிப் பார்த்தார். திருவாயில் நஞ்சின் கடுகளவு கிற மும் இல்லை ; செக்கச் செவேலென்று பவளம் போல இருந்தது.

பவளமே திருவாய்.

உதட்டில் படாமல் விழுங்கி விட்டானே? அப்படி யாயின் அவன் பற்கள் எப்படி இருக்கின்றன ?’ என்ற நினைவு அடுத்தபடி வந்தது. பக்தருடைய உள்ளம் தாயின் உள்ளத்தை ஒத்திருந்தது. தன் குழந்தை சற்றே தடுக்கிக் கீழே விழுந்தாலும் எங்கேனும் காயம் பட்டதோ என்று உடம்பெல்லாம் தடவிப் பார்க்கிருள் அல்லவா? அப்படிப் பார்க்கிருர் இந்தப் பக்தர். திருவாய் பவளம்போல இருக் கிறது. ஒருகால் அந்த நஞ்சு பல்லேக் கறுக்கச் செய்திருக் குமோ? இறைவன் புன்சிரிப்புத் தவழக் காட்சி கொடுக் கிருன். அதனுல் பல்லின் வரிசை தெளிவாகத் தெரிகிறது.