பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 முகவுரை

 சைவத் திருமுறைகளில் ஒன்பதாவது, திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் சேர்ந்த தொகுதி. திருமுறைகளை முதல் இராசராச சோழனுடைய வேண்டுகோளின்மேல் திருநாரையூர் நம்பி யாண்டார் நம்பி பதினொன்றாக வகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் என்னும் நூல் தெரிவிக்கிறது.
  ஏழு திருமுறைகளாக முதலில் தேவாரத்தை வகுத்துப் பிறகு மற்றவற்றை நான்காக வகுத்தார்.

"ஆகவனச் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று மோகமெறி திருவிசைப்பா மாலைமுறை ஒன்றுசிவ போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ்பெறவே பாகமிகும் திருமுறைகள் பந்தாக வைத்தார்கள்"

என்பதில் திருவிசைப்பா ஒன்பதாந் திருமுறையாக வகுக்கப் பெற்ற செய்தி வருகிறது. இதில் திருவிசைப்பா மாலை என்று இத்திருமுறை சொல்லப் பெற்றிருக்கிறது.

முதல் இராச ராசன் காலத்தில் இத்திருமுறைகளே வகுத்தாலும் திருவிசைப்பாவில் பின்னரும் சில பாடல்கள் சேர்க்கப் பெற்றிருக்க வேண்டும். முதல் இராசராசனுடைய மகளான இராசேந்திர சோழன் கட்டியது கங்கை கொண்ட சோளேச்சரம். கங்கைகொண்ட சோழன் என்பது அவன் பெயர்களில் ஒன்று. அந்தத் தலத்தைப் பற்றிக் கருவூர்த்தேவர் பாடிய பதிகம் ஒன்று திருவிசைப்பாவில் சேர்ந்திருக்கிறது. இப்பதிகம் நம்பியாண்டார் நம்பி திருமுறை வகுத்ததன் பின் எழுந்தது. இப்படி வேறு பதிகங்களும் சேர்ந்திருத்தல் கூடும்; அல்லது இராசராசேச்சுரப் பதிகம் இருப்பதால் இதுவும் சேர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அந்த ஒன்றை மாத்திரம் கூட்டியிருக்கலாம்.

திருவிசைப்பாவில் ஒன்பது பெரியோர்கள் பாடிய இருபத்தொன்பது பதிகங்கள் இருக்கின்றன; இப்போது உள்ள பாடல்கள் 301. திருவிசைப்பாவைப் பற்றிக் கூறும் பழம் பாடல் ஒன்றில் பதிக எண்ணிக்கையும் பாடல் தொகையும் உள்ளன.

  • அடைவுறுமா ளிகைத்தேவர் நான்கு, சேந்தர்

அன்புறுபல் லாண்டொன்றோ டிசைப்பா மூன்று திடமுடைய கருவூரார் பத்து, வீறிற்

சிறந்தகா டவர் இரண்டு, கண்டர்வே னாடர்