பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஒளிவளர் விளக்கு

எல்லாம் இருக்கும். ஆடை, அலங்காரம், வாத்தியம் முத லிய சிறப்புக்களே எல்லாம் திருவிழாக்களில் காணலாம். உற்சவ விக்கிரகமாக இறைவன் திருவீதியிலே எழுந்தரு ளும் போது காண்கின்றவர்கள் எல்லாம் அந்தக் காட்சி யிலே மனம் லயித்து நிற்பார்கள். வாணவேடிக்கை களைக் கண்டு இன்புறுகிறவர் பலர். சங்கீதம் முதலிய வற்றைக் கேட்கின்றவர் பலர். நல்ல நறுமண மலர்கள் இன்பத்தைத் தர, அதல்ை இன்ப மடைகிறவர் சிலர். இப்படியாக ஐந்து இந்திரியங்களுக்கும் இன்பத்தைத் தரு கின்ற பல பொருள்களேக் கூட்டித் திருவிழாவை நடத்து கிருர்கள். மக்கள் பெருங் கூட்டமாக வந்து, இறைவனைத் தரிசிக்கும் பொழுது, அதில் ஈடு படாதவர்கள் கூட மெல்ல மெல்லத் தம்முடைய வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்ப்பார்கள். முதலிலே எட்டிப் பார்க்கும் அந்த முயற்சியே பின்பு திருவீதிக்கு வந்து கை குவித்துப் பார்க் கும்படியாகச் செய்யும்.

இப்படி மெல்ல மெல்ல வீட்டுக்குள்ளே இருக்கும் ஒருவனே வெளியிலே இழுத்து, தன்னைப் பார்க்கும்படி யாகச் செய்யும் பொருட்டு ஆண்டவன் திருவுலா வருகிருன். 'நீ என்னுடைய வீட்டுக்கு வராவிட்டாலும் கான் உன் வீட்டுக்கு வருகிறேன்' என்று கருணை மிகுதியினலே உலா வருகிருன். தன்னிடத்தில் வந்து அன்பு செய்வதற் குரிய மனம்படைக்காதவர்களுக்கு, உருகாத கல் மனத் தினர்களுக்கு, அவர்களுடைய வீட்டுக்குச் சென்று, கான் இதோ வந்திருக்கிறேன்' என்று தன்னுடைய உருவத்தைக் காட்டி, அவர்களுடைய மனத்தை உருக்குவதற்காகவே இந்த உலாக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

திருவிழாக்களில் எம்பெருமான் பல திருக்கோலங்களைக் கொண்டு, பலவகையான அலங்காரங்களைப் பெற்றுத் திருவீதிகளிலே உலா வருவது காண்பதற்கரிய காட்சி