பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஒளிவளர் விளககு.

பேரழகளுகிய திரிலோக சுந்தரன் அவன். அவன் இப்போது வீதியிலே எழுந்தருளித் தன்னுடைய அற்புதமான திருக் கோலத்தைக் காட்டினன். அந்தப் பெண், வீட்டுக்குள்ளே இருந்தவள் வெளியிலே ஒலிக்கின்ற இசைக் கருவிகளின் இசையைக் கேட்டாள். அங்கே பரவியிருக்கின்ற மலரின் மணத்தையும் தூபத்தின் மணத்தையும் உணர்ந்தாள். பெருங்கூட்டமாக கின்று அன்பர்கள் வாசலிலே ஹர ஹர' என்று ஆரவாரம் செய்வதைக் கேட்டாள். இவை யாவும் உள்ளேயிருக்கும் அவளே வெளியிலே இழுத்து வந்தன. வந்து பார்த்தாள். இதுவரைக்கும் பாராத காட்சியைக் கண்டாள். மிகவும் அழகான திருக்கோலத்துடன், கல் மனத்தையும் உருக்குகின்ற காட்சியுடன், எம்பெருமான் விடையின்மேல் எழுந்தருளி வந்தான். அந்தப் பெரு மானேக் கண்டவுடன்,"இதுகாறும் நாம் இந்தத் தோற்றத் தைக் காணவில்லையே! என்று அவள் மனம் நைந்து உரு கியது. நையாத மனத்தினளாகிய அவள் இப்பொழுது நைந்துபோளுள், அடடா, இந்தப் பெருமானே நாம் இவ்வளவு காலம் மறந்திருந்தோமே! இவனே நாம் சென்று வேண்டி, இவனுடைய திருவழகைப் பார்த்து இன்புற வேண்டியிருக்க, இவனே நம்மைத் தேடிக்கொண்டு நம் வாசலில் வந்து விட்டானே! என்று அவள் மனம் உருகியது. -

தன்னுடைய வீட்டு வாயிலிலே எம்பெருமான் எழுங் தருளியிருக்கும்போது, அவனுடைய அடிமுதல் முடிவரை உள்ளே அலங்காரங்களைக் கண்டு, அவனுடைய பேரழகிலே ஈடுபட்டு கின்ருள். அவள் பெண்தானே? அவனேத் தொடர்ந்து அவன் உலாவப்போகும் வீதி எல் லாம் சுற்றித் திரிய முடியுமா? காணம் உடைய பெண் ணுகையாலே அவனத் தன் கண்ணுலே கண்ட அளவில் இன்புற்ருள். உள்ளத்திலே படம் பிடித்துக் கொண். டாள். வீட்டுக்குள்ளே சென்ருள். அதுவரைக்கும் உரு