பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலா வந்த பெருமான் 45

காத மனத்தைப் பெற்ற அந்தப் பெண்ணுக்கு அதுமுதல் உள்ளம் உருகியது. எம்பெருமானுடைய திருவுருவம் அகக் கண்ணிலிருந்து மறையாமலே கின்று கொண் டிருந்தது. அதை கினேந்து கினேந்து எப்பொழுதும் அந்தப் பெருமானப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தாள்.

நையாத மனத்தினளே தைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்பேர்ந்த அன்றுமுதல்.

אי

அதுவரைக்கும் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் வந்ததில்லை. இப்பொழுது அவள் கிலையை அவள் தோழி பார்க்கிருள். பார்த்து, ஏது இவளிடத்தில் புதிய கோலம் உண்டாயிருக்கிறது?’ என்று கினைத்துப் பார்க் கிருள். ஓரளவு அவள் தெரிந்து கொள்கிருள். -

அந்த இளம் பெண் எப்பொழுதும் இறைவனை கினேந்து கைகளைக் குவித்துத் தொழுகிருள். கண்களிலிருந்து அருவி போல நீர் சொரிந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைத் தோழிதான் நன்கு தெரிந்து கொண்டாளே! நையாத மனத்தினளாகிய அந்தப் பெண்ணே கைவிக்கும் பொருட்டே திருவுலா வந்தான் எம்பெருமான். மூவுலகத்திலும் ஒப்பற்ற பேரழககை விளங்கும் சிவபெருமான் அந்தத் தெருவிலே வந்தான் என் பதைத் தெரிந்துகொண்டாள். அப்படி வந்தது என்ருே ஒரு நாள். ஆனல் பல காலமாக அதையே கினேந்து கொண்டு, இந்தப் பெண் இன்னும் வருந்திக்கொண்டே யிருக்கிருள். இப்படி இருந்தும் இன்னும் அவன் அருள் செய்யவில்லையே! "அருள் செய்ய மாட்டாயா?" என்று எம் பெருமானே கோக்கி அந்தத் தோழி கேட்கிருள்.

கருவூர்ச் சித்தர் தோழி சொல்லும் வார்த்தையாக இந்தப் பாட்டை அமைக்கிருர்.