பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒளிவளர். விளக்கு

நையர்த் மனத்தினளே நைவிப்பான் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுது அருவி கண்ணுரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே? (ஐயா! திரை லோக்கிய சுந்தரனே! உருகாத மனத்தையுடைய இப்பெண்ணே உருகச் செய்யும் பொருட்டு இந்தத் தெருவின் வழியே, நீ திருவுலா வந்த அந்த நாள்முதல் இன்று வரையிலும் கின்னே இவள் கையாரத் தொழுது, கண் நிறைய நீரை அருவி யாகச் சொரிந்தாலும் அருள் செய்யமாட்டாயா ?

கையாத உருகாத, கைவிப்பான் - உருக்க, கை ஆர கை நிறைய. கண் ஆர - கண் நிறைய. திரைலோக்கிய சுந்தரன் . மூவுலகத்துக்கும் பேரழகன். -

கையாத மனத்தினனே என்பதும் ஒரு பாடம்.

இது திரைலோக்கிய சுந்தரம் என்ற திருத்தலத்தில் பாடப்பெற்றது. அது கோட்டுர் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. கோடை என்பது கோட்டுர். கோட்டுருக்கு அருகில் உள்ள திரைலோக்கிய சுந்தரமாதலின் கோடைத் திரைலோக்கிய சுந்தரம் என்ருர். இது திரைலோக்கி என்று இப்போது வழங்குகின்றது.