பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5秒 ஒளிவள விளக்கு

அன்னமாய்ப் பறந்து தேடிய அவன் இறைவனுடைய திருவுருவ எல்லமுடிய நாடவில்லை. அவன்மேல் எல்லையை மாத்திரம் கருதி மேலே பறந்தான். அவனுடைய கீழ் எல்லேயை மற்ருெருவர் தேடினர். திருமால் இறைவன் திருவடியைக் காணவேண்டு மென்று புறப்பட்டார் அல்லவா? நான்முகன் அள்னமாகிய கதையின் மற்ருெரு. பகுதி இது. அதையும் கருவூர்ச்சித்தர் கினேத்துப் பார்த் தார். 'பிரமன் தேட அவனுக்குத் தட்டுப்படாமல் பெரியவ. கை கின்றவன் என்ருேமே அதற்குமேலும் அவன் பெருமை உண்டே, அதை மறக்கலாமா? கான்முகன் தேடிய அந்தப் பழங்காலத்திலே மாலும் தேடினன். அவ னும் அறியாமல் பெரியவகை கின்றவன் இறைவன்' என்று கினேங்தவுடன், அவர் சொல்லலானர்.

முன்னம்மால் அறியா ஒருவன்.

(சோதிவிங்கமாக கின்ற பழங்காலத்தில் திருமால் அறிய முடியாமல் கின்ற ஒருவன். -

ஒருவன் ஒப்பற்றவன்.)

அவன் ஒருவன். ஆலுைம் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு திருக்கோலம் இணைந்த உருவமுடையவன். தனித் தனி இரண்டு பேராக இருந்தால் இருவர் என்று சொல்ல. லாம். எம்பெருமானே ஒரே உருவத்தில் இரு வேறு கோல இணேப்புடன் விளங்குகிருன். அவனும் அவளுமாகிய ஒருவன் அவன். ஒருவன் என்றும் சொல்ல ஒண்ணுது: இருவர் என்றும் சொல்ல ஒண்ணுது. இரண்டையும் கலந்து இருவன் என்ருல் என்ன? .

கருவூர்ச்சித்தர் புதிய சொல் ஒன்றைப் படைத்தார். இருவன் என்பதுதான் அச்சொல். அந்தப் பெயரால் இறைவனே விளிக்கிரு.ர். -

முன்னம்மால் அறியா ஒருவளும் இருவா!