பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது எளிமை 51. -

ஒருவன், இருவன் என்று சொன்னவுடன் அவருக்கு எண்களின் அடுக்கு நினைவுக்கு வந்தது. ஒன்று இரண்டு மூன்று நான்கு-இப்படி உள்ள எண்களே நினைந்தார்; இறைவைேடு தொடர்பு படுத்தினர். ஒன்று-ஒருவன் என்று சொன்னர். இரண்டு-இருவன் என்று பொருத் தினர். மூன்று-முக்கண்ணின் நினைவு எழுந்தது. நான்கு -நான்கு தோள்களே கினைந்தார்; பாடினர்.

ஒருவனும் இருவா! முக்களு! நாற்பெருந் தடந்தோள் - கன்னலே! . - (ஒப்பற்றவனம் இருவர்கோலம் ஒன்ருகியவனே மூன்று கண்களை உடையவனே! பெரிய விலாசமான நான்கு தோள்களை உடைய கரும்பு போன்றவனே! ,'

கன்னல் - கரும்பு.)

ஒப்பற்றவணுகவும் நான்முகனுக்கும் திருமாலுக்கும் அறிய ஒண்ணுதவனுகவும் சிவ சக்தி யுருவணுகவும் முக்கண் மூர்த்தியாகவும் நான்கு தோள்களை உடையவனுகவும் சிற் கும் இறைவன் அடியார்க்கு எளியவகை அவர்களுடைய சிறிய நெஞ்சிலும் புகுந்து கோயில் கொண்டு விளங்கு கிருன். அவன் அவர்களுடைய உள்ளத்தில் இருப்பது எட்ப டித் தெரிகிறது? அவர்களுக்கு உலகத்துப் பொருள்களால் உண்டாகாத இன்ப அநுபவம் உண்டாகிறது. அதை எப்படிச் சொல்வது? கரும்பையும் தேனையும் இனி மைக்கு அளவு கோலாக வைத்துக் கொண்ட உலகத்துக்கு அவற்றைச் சொன்னுல்தான் விளங்கும். இனிய பொரு ளுக்குத் தாங்கள் அறியாத ஒன்றைக்கூட மக்கள் உவமை யாகச் சொல்வார்கள். அந்தப் பொருள் தான் அமுதம். இந்த எல்லாவற்றையும் சொல்லி இறைவன் இன்ப அது பவப் பொருளாக அடியவர்களுக்கு இருப்பதைச் சொல் கிருர் கருவூரார்.