பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி என்ன கவலை?

பெரிய கடல் அது ; அலே கொந்தளித்துக் குமுறும் கடல். அதன்கண் விழுந்தவர்கள் மீண்டும் கரையேறு. வது என்பது இயலாத காரியம். கடலில் கையாற்றல் உள்ள வரையில் மிதந்து நீந்தலாம் என்ருலோ அக்கடலில் உள்ள சுரு மீன் முதலியவை சும்மா விடுமா? எப்படியோ தவித்து முயன்று மேலே ஒருவன் மிதக்கிருன். கடலில் மிதந்து வரும் கட்டை ஒன்றைப் பற்றிக்கொண்டு இளைப் பாறுகிருன், நல்ல வேளை யாக ஒரு தோணி அந்தப் பக்க மாக வருகிறது. கையிளேத்துப் போனவன் கதறுகிருன். உதவி வேண்டுமென்று கூவுகிருன். அப்போது தோணி யில் உள்ளவர்கள் இரங்கி அவனருகில் வந்து அவனே ஏற்றிக் கொள்கிருர்கள். இனி அவனுக்குக் கடலேப் பற்றிய பயமே இல்லை. எப்படியாவது தோணி அவனைத். கரையில் சேர்த்துவிடும். -

கடற்கரையில் அவன் ஏறினால் போதுமா? அவன் போக வேண்டிய வீடு கடற்கரையிலிருந்து கெடுங்துரக் தில் இருக்கிறது. அதற்குப் போகும் வழி எளிதில் கடந்து செல்லக்கூடியது அன்று; அந்த வழியில் ஆறலை கள்வர் இருக்கிருர்கள். வழிப்டோவாரிடத்தில் எவ்வளவு சிறிய பொருள் இருந்தாலும் விடமாட்டார்கள், கைப்பற்றிக் கொள்வார்கள். அவர்களுக்குத் தெரியாமல் அந்த வழி யைக் கடக்க வேண்டும். அல்லது அவர்களைத் தன்னு: டைய வலிமையாலே எதிர்த்து அடக்கி வென்று மேலே செல்லவேண்டும்.

கடலிலே தத்தளித்தவன் தோணியில் ஏறிக் கரையும் ஏறிவிடுகிருன். பிறகு உள்ள வழியில் கள்வர்களோடு: