பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி என்ன கவலை? 55

சேர்வதற்கு அடியார் கூட்டமாகிய தோணி கிடைத்தால் ஏறிக் கொள்ளலாம். அந்தத் தோணி கிடைக்கிறது; குரு என்ற தோணிக்காரன் தோணியில் ஏற்றிக் கொள் கிருன். இருவினையாகிய கடலைக் கடந்து இருவினேயொப் பாகிய கரையை அடைகிருன். ஐம்பொறிகளாகிய கள்வர்கள் ஞானமென்னும் செல்வத்தைக் கவரப் பார்க் கிருர்கள். அவர்களே ஒறுத்து இந்திரிய கிக்கிரகம் என் னும் வெற்றியைப் பெற்று மலபரிபாகம் அடைந்து பின்பு சத்திரிபாதம் என்ற சிலையை அடைகிருன் இறைவ. னுடைய அருளினிடத்தே ஒன்றும் முயற்சியில் அவனு டைய திருவடியை அடைந்து பற்றிக் கொள்கிருன்.

பாசமும் இந்திரியங்களும் உயிர் களேப் பிறவிக் கடலில் ஆழ்த்திப் பல விதமான துன்பங்களே அடையச் செய்கின் றன. அவற்றின் வலிமை யொழிந்தால் இறைவன் திருவரு ள நுபவம் உண்டாகிறது. அந்த அருளதுபவம் பெற்றவர் களுக்கு, இந்த உடம்போடு வாழ்ந்தாலும் அச்சம் இருப்ப தில்லை. எல்லாப் பற்றையும் விட்டுச் சிறந்த பற்றுக் கோடாகிய இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்டமை யால், இந்த உடம்பு எவ்வளவு நாளைக்கு இருந்தாலும் அவர்களுக்குக் கவலை உண்டாவதில்லை. ‘இனி நமக்கு என்று விடுதலே கிடைக்கும் என்ற கவலை இல்லை. மரணம் வருமே என்ற துக்கமும் இல்லை என்ற பெருமித நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

"சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது

தான்வந்து முற்றும் எனலால்

சகமீ திருந்தாலும் மரணம் உண் டென்பதைச்

சதாகிஷ்டர் நினேவ தில்லை”

என்பது தாயுமானவர் வாக்கு.