பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி என்ன, கவலை? 57.

இந்த கனவு கருவூர்த் தேவருக்குத் திருப்பூவணம் என்னும் தலத்தில் உண்டாயிற்று. வையையாற்றங்கரை யில் உள்ள தலம் அது. அந்த ஊரைப்பற்றிச் சொல்கிருர். . இறைவனுடைய அருள் விளக்கம் மலிந்த அந்த ஊரில் செல்வம் வளர்கிறது. எங்கே பார்த்தாலும் மிக உயர்ந்த மாடங்கள் உள்ளன. அந்த மாடங்களில் இரவு பகல் இல்லாமல் ஒளி கின்று நிலவுகிறது. இரவு நேரங் களில் கண்ணேப் பறிக்கும் கிலே விளக்குகள் பல ஒளிவிடு கின்றன. வீடு எங்கணும் காற்ருேட்டத்துக்காகப் பல சாளரங்கள் வைத்திருக்கிருர்கள். அவற்றின் வழியே உள்ளே உள்ள விளக்குகளின் ஒளி புறத்தே வீசுகின்றது. சாளரங்களின் பக்கத்தில் விளக்குகள் கிடந்து இலங்கு கின்றன. இப்படி ஒளியும் உயர்வும் உள்ள மாடங்கள் பல பண்டங்களே விற்கும் அங்காடி வீதிகளில் கிற்கின்றன. அந்த ஆவண விதி பூவண நகரின் செல்வச் சிறப்பைக் காட்டுகிறது. அத்தகைய பொருள் வளம் சிறக்கும் நகரில் அருள்வளமும் கொழிக்கும் வண்ணம் எம்பெருமான் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிருன்.

நெடுநில மாட்த்து இரவுஇருள் கிழிக்க நிலவிளக்கு அலகில்சா லேகப் புடைகிட்த் திலங்கும் ஆவண விதிப்

பூவணம் கோயில் கொண் டாயே.

(உயர்ந்த பல நிலைகளையுடைய மாடங்களில் இரவில் இருக்ளக் கிழித்துக்கொண்டு ஒளி பரவும்படியாக கிலே விளக்குகள் கணக் கற்ற சாளரங்களின் பக்கத்திலே இருந்து விளங்கும் ஆவண விதி களையுடைய திருப்பூவணத்தில் கோயில்கொண்டு எழுந்தருளி இருப்பவனே !

கிலே - அடுக்கு, எ ழு கிலே மாடம் என்பது போன்றது. அலகு. கணக்கு. சாலேகம் - சாளரம். புடை - அருகில். ஆவண வீதி .

கடைத்தெரு.)

ஒ-வி-5