பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஒளிவளர் விளக்கு

இறைவன அடைய வேண்டிய முறைப்படி அடைந்த வர்களுக்கு, மேற்கொண்டு எல்லாம் அவன் செயல் என்ற உறுதி அமைந்துவிடுவதால் அவர்களுக்குக் கவலை இருப்ப தில்லை. அவனடியைப் பற்றிக் கிடந்தால் மற்றப் பொருள் களால் வரும் கவலை மாத்திரம் அன்று, அவன் அருள் வானே, அருளா தொழிவானே என்ற கவலைக்கும் இடம் இல்லை.

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலே மாற்றல் அரிது.” என்ற திருக்குறள், மனக் கவலைக்கு மாற்று இறைவன் திருத்தாளேப் பற்றுதல் என்பதைச் சொல்கிறது.

கடுவினப் பாசக் கடல்கடந்து ஐவர் - - கள்ளரை மெள்ளவே துரந்து உன் அடியினை இரண்டும் அடையுமாறு அடைந்தேன்;

அருள்செய்வாய், அருள்செயாது ஒழிவாய்! நெடுநில மாடத்து இரவுஇருள் கிழிக்க

நிக்ல்விளக்கு அலகில்சா லேகப் புடைகிடந்து இலங்கும் ஆவண விதிப் பூவணம் கோயில்கொண் டாயே! இப் பாசுரம் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவில் திருப் பூவணப் பதிகத்தில் ஐந்தாவதாக அமைந்திருப்பது.