பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கோயில்

சோழ அரசர்களில் பிற்காலத்தில் மிகச் சிறந்த சில யில் வாழ்ந்தவன் முதலாம் இராசராச சோழன். அவ னுடைய வீரமும் ஈரமும் வெற்றியையும் புண்ணியத்தை யும் அவனுக்குக் காணியாக்கின. நாலு திசையிலும் தன் ணுடைய வீரத்தினல் வெற்றியை நிறுவிய அவன் தஞ்சை யில் இறைவனுக்கு ஒரு பெரிய கோயிலே எடுத்தான். அது இன்றும் வானுற ஓங்கி கிற்கிறது. அதற்கு இராச ராசேச்சுரம் என்ற பெயர் உண்டாயிற்று. தன் னுடைய வெற்றி மிடுக்கினல் அவன் செருக்கு அடைய வில்லை. இறைவனுக்குத் திருக்கோயில் எடுத்து வழி பட்டான். அவன் காலத்தில் கருவூர்த்தேவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிய கதை ஒன்று கர்ண பரம்பரை யாக வழங்கி வருகிறது. . .

இராச்ராச சோழன் வடக்கே யிருந்து பெரிய லிங்கத் தைக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்ய எண்ணினன். கோயிலும் பெரியது. அதில் எழுந்தருளியிருக்கும் சிவ லிங்கப் பெரும்ானும் பெரியவர். அவருக்குப் பெருவுடை யார் என்றும் பிருகதீசுவரர் என்றும் திருகாமம் வழங்கும். அவ்வளவு பெரிய லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தன மருந்து வைத்து கிறுவினர்களாம். அது சரியாகப் பொருந்தவில்லையாம். எத்தனையோ ஆர்வத் தோடு அப்பெருமான நிறுவ எண்ணிய அரசனுக்கு இப்போது கவலை உண்டாகிவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் மருந்து பிடிக்கவில்லை. அப்போது கருவூர்ச் சித்தருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அவர் திருக்கோயிலுக்கு வந்தார். தாம்பூலம் தரித்து அதே