பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒளிவளர் விளக்கு

எச்சிலே மருந்து வைத்த இடத்தில் துப்பினர். மருந்து பிடித்துக்கொண்டது. சிவலிங்கப்பெருமான் அசையவில்லை.

இந்தக் கதை உண்மையானலும் அன்ருனலும் இராச ராச சோழன் தஞ்சைத் திருக்கோயிலை எடுத்தபோது அவனுக்கு உறுதுணேயாக இருந்து கருவூர்ச்சித்தர் உதவி ஞர் என்ற செய்தியை இதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். மூவர் காலத்துக்குப் பின்னல் எழுந்த கோயிலாதலின் அதற்குத் தேவாரப் பாடல் அமையவில்லை. ஆயினும் தக்க பெரியாரின் பாடல் வேண்டும் என்று விரும்பினன் அரசன். கருவூர்த்தேவர் தம் கண்முன் எழும்பிய அத் திருக்கோயிலைப் பாடினர். திருவிசைப்பாவில் அவர் பாடிய பதினெரு திருப்பாடல்கள் உள்ளன.

கருவூரார் தாம் பச்சிலை தின்று சித்த கிலே பெற்றதை அப்பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் சொல்கிருர்.

அருமருந் தருத்தி அல்லல்திர் கருவூர்

அறைந்தசொல் மாலேயி ரைந்தின் பொருள்மருந் துடையோர் சிவபதம் என்னும் பொன்னெடுங் குன்றுடை யோரே என்பது அப்பகுதி. -

அப்பதிகத்தில் ஒரு பாசுரத்தை இங்கே பார்க்கலாம்.

தஞ்சை சோழ ராசதானியாதலின் மிகப் பெரியது. பல வகையான மாடங்களும் மாளிகைகளும் நிரம்பியது. கலைஞர்களும் கவிஞர்களும் குழுமித் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுக் களிக்கும் இடம் அது. அங்கங்கே கடம்பயிலும் மகளிர் பலர் வாழ்ந்தனர். அதற்கு ஏற்ற சிறந்த நாடக சாலைகள் நகரத்தில் இருந்தன. மிகப் பெரிய சாலைகள் அவை. பார்த்தால் குன்றுப்ோல் ஓங்கி நின்றன.