பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்கையும் புனலும்

எங்கும் மழை பெய்து நீர் தேங்கியிருக்கிறது. ஆற்றில் செக்கச் செவேலென்று புது வெள்ளம் வருகிறது. அதோ ஒரு பொய்கை நிறைந்து வழிகிறது. அந்த நீரும் கலங்கலாகத்தான் இருக்கிறது.

புதிய நீர் வந்தால் அது இப்படிக் கலங்கலாக இருப்ப தேன்? மண்ணே அளித்துக்கொண்டு வரும் நீரில் அந்த மண் கலப்பதனால் நீர் கலங்குகிறது. ஆழமான ைேர எவ்வளவு கலக்கினலும் அது கலங்காது. ரிேல் வேறு ஒன்றும் கலக்காத வரையில் அதற்குக் கலக்கம் இல்லை. மழை பெய்யும்போது மண் கலப்பதல்ை நீர் மண்ணின் இயல்பையும் ஏற்று நிறமும் சுவையும் மணமும் மாறி கிற்கிறது. .

'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும்’ என்ற குறளில் இந்தச் செய்தி வருகிறது.

ஆற்றிலே கலங்கிய நீர் வந்தால் அதை எடுத்துத் தெளிய வைக்கவேண்டும். குளத்திலே கலங்கிய நீர் இருந் தால் சில காலம் அப்படியே இருக்கும்; வரவரத் தெளிந்து விடும். நீரில் கலந்திருந்த மண் மெல்ல மெல்லக் கீழே போய்ப் படிந்துவிடும் போது நீர் தெளிகிறது. அது வரையில் நீரோடு கலந்து தனியே தெரியாமல் இருந்த மண், தெளிந்தபோது கீழே படிந்துவிடுகிறது. அப்போது நீரின் தெளிவால் கீழே படிந்த மண் கன்ருகத் தெரிகிறது. தண்ணிர் கலங்கி யிருந்தபோது அதில் மண் கலந்திருப் பதை யாரும் கினைத்துப் பார்க்கிறதில்லை. மழையில்ை புறத்திலுள்ள மண் நீரோடு கலந்து வந்துவிடுகிறது. நீர்