பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்கையும் புனலும் 67.

தெளிந்தபோது தெரிவதால் அப்போது புகுந்தது போலத் தோன்றுகிறது. மண் முன்பு கலந்திருந்தது; பின் கீழே படிந்து தோன்றியதே ஒழியப் புதிதாகப் புகவில்லே. இறைவன் புகுந்ததும் அத்தகையது தான்.

கருவூர்த் தேவர் இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உடை யவர். அவரை மற்றவர்கள் பார்த்தால், 'இவருடைய அன்பு எவ்வளவு சிறந்தது!" என்று வியப்படைவார்கள். அவரோ மற்ற அன்பர்களைப் பார்த்து, 'ஆ ! எத்தனே அன்பு இவருக்கு ' என்று வியப்பவர். தமக்கு அவர்களைப் போன்ற அன்பு இல்லையே என்று ஏங்குவார். இந்த இயல்பு எல்லா அன்பர்களிடத்திலும் காண்பதற்குரியதே.

தம்முடைய அநுபவத்தால் உணர்ந்ததை, 'இது என் அநுபவம்” என்று சொல்ல அவருக்குத் தோன்றவில்லை. 'இப்படியெல்லாம் அன்பர்கள் அநுபவிக்கிருர்கள் " என்று மற்ற அன்பர்களைக் காட்டுகிரு.ர். அவர்கள் இறைவனே அணுகி உருகுவதை எண்ணி எண்ணி இன்புறுகிருர். நமக்கும் சொல்கிருர். இறைவன் தம் சிந்தையுட் புகுந்ததைத் தெளிந்த சிந்தையோடு கண்டு, அந்த அநுபவத்தை அவர்கள் சொல்வதாகத் தொடங். கியவர், மேலும் சொல்கிருர்.

உண்மையான பக்தர்கள், 'நான் பக்தி செய்தேன்; அதளுல் இறைவன் என்னே ஆண்டுகொண்டான்' என்று சொல்லமாட்டார்கள். "ஒன்றுக்கும் பற்ருத நாயேனேயும் அவன் தன் கருணையில்ை ஆட்கொண்டான்" என்றுதான் சொல்வார்கள். கருவூர்ச் சித்தர் நமக்குக் காட்டுகிற பக்தர் என்ன சொல்கிருர் தெரியுமா? "நான் பெரிய வம்புக் காரகை இருந்தேன். என்னுடைய அறிவிலே புகுந்து இறைவன் கிற்கிருன்' என்கிரு.ர். இறைவன் சங்கிதானத் தில் கின்று, "ஆண்டவனே, பொய்கையில் நீர் தெளிந்த