பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒளிவளர் விளக்கு

போது மண் தோன்றியது போல, என் சிங்தை தெளிந்த போது உன்னேக் காணச் செய்தாயே! அப்படித் தெளிந்த தற்குக் காரணமான முயற்சியை நான் செய்யவில்லை. கான் வம்புகளிலே சிக்கிக் கலங்கி கின்றவன். என் அறிவிலே கலந்து அதைத் தெளியச் செய்தவனும் தோன். எந்தத் தகுதியும் இல்லாத எளியேனே ஆண்டுகொண்ட கருணைக்கு நான் என் செய்ய வல்லேன்!” என்று சொல்லிச் சொல்லி உருகுகிருர் புலம்புகிருர்.

கலங்கலம் பொய்கைப் புனல் தெளி விட்த்துக்

கலந்தமண் இடைக்கிடந் தாங்கு நலம்கலந்து அடியேன் சிந்தையுட் புகுந்த

நம்பனே! வம்பனே னுடைய புலம்கலந் தவனே! என்று நின்று உருகிப்

புலம்புவார். (வம்பனேன். வம்பகிைய கான். புலம் - அறிவு.)

★ இப்படி உருகுகின்ற பக்தர்களின் உள்ளத்தில் அன்பு வெள்ளம் தேக்கெறிகிறது. அதன் அடையாளம் போல. அவர்களுடைய கண்களில் நீர் அருவியாக வருகிறது. கார்காலத்து மழையில்ை வரும் அருவியைப் போல அன்பர் களின் கண்கள் நீர் சொரிகின்றன. அது பக்தியின் அடை யாளம்: -

"உடம்பெல்லாம் கண்ணுய் அண்ணு

வெள்ளந்தான் பாயாதால்” - என்று மாணிக்கவாசகர் இந்த நிலையைச் சுட்டுகிரு.ர்.

அன்பர்களுடைய கண் கலங்கி மலங்கியிருக்கிறது. ஒலித்து வருகின்ற கார்காலத்து அருவிபோல அதிலிருந்து நீர் பெருகுகிறது. அத்தகையவர்களின் கண்மணியைப் போல இறைவன் விளங்குகிருன்.

இறைவன் அடியவர்களின் கண்மணியைப் போல விளங்குகிறவன் என்று சொல்ல வந்த கருவூர்த் தேவர்,