பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Թարատապա புனலும் 69.

அந்தக் கண்ணேச் சிறப்பிக்கிருர் கண்ணுக்குள்ள தனிச் சிறப்பு எது? , கருத்திலே உள்ள உணர்ச்சியை மெய்ப்பாட்டினல் உணர்த்துவது அது. அடியாருடைய கண் அல்லவா? அவர்கள் இறைவனே வணங்கித் துதித்து உருகிப் புலம்புகிருர்கள். புலம்பிக் கண்ணிர் உகுக்கிருர் கள். இடையரு அருவி சொரியும் கண் அது. அத்தகைய கண்ணில் உள்ள் மணியைப் போன்றவன் அவன். அந்தக் கண் மற்றப் பொருள்களே அவர்கள் பார்க்க உதவுவது மாத்திரம் அன்று; அடியவர்களின் கருத்திலே பொங்கும் அன்பு வெள்ளத்தைப் பிறருக்குக் காட்டும் சாளரமாகவும் அது இலங்குகிறது. -

இறைவன் அடியவர்களின் கண் மணியைப் போல இருப்பவன் என்ற இந்த அருமையான கருத்து, கருவூர்ச் சித்தர் திருவிடைமருதூருக்குச் சென்று இறைவனைத் தரிசித்தபோது தோன்றியது.

கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்

கலந்தமண் இடைக்கிடந் தாங்கு தலம்கலந்து அடியேன் சிந்தையுட் புகுந்த

நம்பனே! வம்ப்னே னுடிைய புலங்கலந் தவனே! என்று நின்று உருகிப்

- புலம்புவார் அலம்புகார் அருவி மலங்கள்.அம் கண்ணில் கண்மணி அணையான்

மருவிடம் திருவிடை மருதே. - - (அலம்பு ஒலிக்கின்ற. கார் அருவி - கார்காலத்து அருவி. மலங்கல்-கலக்கம் மருவு இடம் எழுந்தருளிய தலம். திருவிடை மருது திருவிடைமருதுரர். - x

"கம்பனே! கலந்தவனே! என்று புலம்புவாருடைய கண்ணிற். கண்மணி யனையான் மருவும் இடம் திருவிடைமருது.)