பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

ஒகவும் சத்தியாகவும் சிவமாகவும் உலகெலாம் படைத்த தனி முழு முதலாகவும் உலகுக்கு வித்தாகவும் இருக்கிருன், அடியவர்களுடைய சித்தத்தில் தித்திக்கும் தேகைவும், அளிவளர் உள்ளத்தில் ஆனந்தக் கனியாகவும் விளங்குகிருன். கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி அவன்; மதிப்பவர் மன மணி விளக்கு அவன். அவன் திருமுகம் அன்பர்களுக்கு கிறைய ஆனந்தம் பொழியும். கையாத மனத்தினரையும் கைவிக்கும் அழகுடைய வன்; மிகப் பெரியவகிைய அவன் அடியார் மனத்துட் புகும் எளிமையுடையவன்; அவர் கெஞ்சமே கோயிலாக வீற்றிருப்ப வன்; அவருக்குக் கன்னலாகவும், தேகைவும் இனிக்கிறவன்; அன்பர் சிந்தை தெளிகையில் அங்கே புகுந்து நிற்கின்றவன்; அவர் கள் அறிவிற் கலந்து விளங்குபவன்; அவர்களுக்குக் கண் மணி போன்றவன்; பக்தியாய் உணர்பவர்கள் நுகருமாறு அருளேப் பொழிபவன்; அமுதமொத்து அவருக்குத் தித்தித்திருப்பவன்; அவரை எப்போதும் தன்னே கினேக்கும்படி செய்பவன்; அவர் களிடம் செல்லுவதை ஒருகாலும் நிறுத்தாதவன்; அவர்கள் பின்னும் பிறவா வண்ணம் அருள் வழங்குபவன்.

அவனே அம்பலம் ஆடரங்காகத் தெய்வக் கூத்தை உகந்த கடராசப் பெருமானுக விளங்குகிருன்; செற்றவர் புரங்களேச் செற்ருன்: சிவன் என்னும் திரு நாமம் தாங்கினன்; நீலகண்ட மும் பவளம் போன்ற திருவாயும் முத்தனேய மூரலும் இன்பம் பொங்கும் திரு முகமும் உடைய பேரழகுக் கோலம் உடையவன்; ஆலத்தை உண்டான்; அயன் அன்னமாய்த் தேடவும் மால்தேட வும் அறியாதவன், முக்கண்ணும் நாலு தோளும் உடையவன்; திருவாரூரில் வீதி விடங்களுக வந்தவன்; உமைக்குக் கணவன் ; பித்தகைத் தோற்றுபவன்.

அவனே அன்பர்கள், "உன்னே அடியேன் எப்படிப் புகழ் வது என்பதை நீயே அருள் செய்வாயாக’ என்று வேண்டு வார்கள். அவனேக் கண்டு கண்டு உள்ளம் குளிர்வார்கள்; கண்ணும் குளிர்வார்கள். கண் பனி அரும்ப, கைகளைக் கூப்பி, "ஒலம்” என்று முறையிட்டு என்பெல்லாம் உருகும்படி நிற்பார் கள். அவன் கோலத்தைக் கண்டு, " அச்சோ! அழகிதே !” என்று குழைவார்கள். அவனுடைய உலாவைக் கண்டு மன முருகிக் கையாரத் தொழுது கண்ணுர நீர் சொரிவார்கள். இறைவன் தமக்கு எளியய்ை வந்ததை மறவாமல் பாராட்டு வார்கள். அவன் திருவடியை எப்படி அடைய வேண்டுமோ அப்படி அடைவார்கள். பாசக் கடல் கடந்து ஐந்து பொறிகளில் உண்டாகும் வேதனையினின்றும் விடுதலே பெறுவார்கள். இறை வன் தம் கெஞ்சில் கலந்து கின்றதை எண்ணி எண்ணி உருகிப்