பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்திக்கும் திருவுருவம்

திருப்பூந்துருத்தி என்பது ஒரு சிவத் தலம். அங்கே நம்பிகாட நம்பி என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனிடத்தில் இடையருத அன்பு பூண்டவர். இறை வன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசித்து உணர்ச்சி வசப்பட்டு, இனிய பாடல்களைப் பாடும் இயல்பு உடையவர் அவர். -

ஒரு நாள் அவர் திருவாரூருக்குச் சென்றிருந்தார். அங்கே, அன்று தியாகராசப் பெருமான் திருவீதியில் எழுந்தருளி உலா வந்து கொண்டிருந்தான். அஜபா நடனம் செய்யும் அந்தப் பெருமானுடைய பவனி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்பொழுது நடை பெறும் நடனம் மிகச் சிறப்புள்ளது. அந்த கடனத்தைக் காண்பதற்காக நெடுந்துாரத்திலிருந்து அடியார்கள் வந்து கூட்டம் கூட்டமாகக் குழுமுவார்கள். தியாகராசப் பெரு மானுடைய திருக்கோலத்தில் தங்கள் கண்களைச் சிக்க விட்டு, மெய்ம்மறந்து நிற்பார்கள். அவனுடைய இருந் தாடும் கோலத்தைப் புகழ்வாரும், செவ்வந்தித் தோட்டு அழகைப் பருகுவாரும், திருமுக மண்டலத்தின் தனியழகை மடுப்பாரும் ஆகப் பக்தி வெள்ளம் அலையோட, அன்பர்கள் தம்மை மறந்து நிற்பார்கள்.

இத்தகைய காட்சியைக் காடநம்பி கண்டார். இறைவ ஆணுடைய திருவுருவத்தில் கண்களைப் புதைத்து, உடம்பெல் :லாம் புளகம் போர்ப்ப, அதுகாறும் கண்டறியாத ஆனந்த அநுபவத்தில் ஒன்றி கின்ருர். தம்மைப் போலவே மற்ற அன்பர்களும் கரையறியா இன்பக் கடலில் மிதப்பதைக் கண்டு, அவருடைய உள்ளம் வியப்பு மயமாயிற்று.