பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்திக்கும் திருவுருவம் 73

பார்த்து இன்புறும் நிலை உங்களுக்கு வரலாம்."-இவ்வா றெல்லாம் எண்ணிப் பூந்துருத்தி காட கம்பி பாடுகிரு.ர்.

பத்தியாய் உணர்வோர் அருளேவாய் மடுத்துப்

பருகுதோறு அமுதம் ஒத்து அவர்க்கே தித்தியா இருக்கும், தேவர்காள்! இவர்தம்

திருவுரு இருந்தவா காணிர் !

(தேவர்களே 1 பக்திமயமாகி உணர்கின்றவர் திருவருளே நுகர்ந்து, கண்களாற் கண்டு அநுபவிக்கும்போதெல்லாம் அமு தத்தை ஒத்து அந்தப் பக்தர்களுக்குத் தித்தித்திருக்கும் இவருடைய திருவுருவம் இருந்த விதத்தைப் பாருங்கள்.

வாய்மடுத்து - உண்டு. தித்தியா இருக்கும் திருவுரு என்று கூட்டவேண்டும். தேவர்காள் : இடைப்பிறவரல். இருந்தவா இருந்தவாற்றை.)

'இங்கே நம்முடைய கண்களாலே கண்டு இன்புறும் வண்ணம் திருவுருவம் கொண்டவர் யார் தெரியுமா ? எளிதிலே காணக் கிடைப்பதல்ை இவரை எளியவரென்று எண்ணக்கூடாது. எல்லா உலகத்தையும் படைத்துக் காத்து அழிப்பதற்கு மூலமாயுள்ள அருட் சக்தி இவரே; அச்சக்தியைத் தம்முள்ளே அடக்கிக்கொண்டு கிற்கும் சிவமும் இவரே. உலகத்துக்கெல்லாம் மூலமாகிய தத்து வத்தைப் புறப்பட விட்டு உலகப் படைப்புக்கு முதலில் காரணராக இருக்கும் முழு முதற் கடவுளும் இவரே. இவ்வுலகம் அழிந்தாலும் மீட்டும் மீட்டும் படைப்பதற் குரிய வித்தாகி விளங்குபவரும் இவரே. இப்படி உள்ள பெருமான் இன்று திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளும் கடவுளாகவும், வீதியிலே எழுந்தருளி கையாதார் உள்ளத் தையும் கைய வைக்கும் வீதி விடங்கராகவும் இருக்கிரு.ர். இதோ இருந்தபடியே நடனமிடும் தியாகராசராக இருக் கிருர் தேவர்களே வந்து பாருங்கள்."

ஒ.வி-ே