பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுகையும் அழுகையும் 77

இருந்து தொழும் தொழும்பர் கிடந்து தொழும் தொழும் பர். எழுந்து தொழும் தொழும்பர்.

இப்படி அடிக்கடி அவர் தொழுவதை மற்றவர்கள் கவனித்தார்கள். சிலர் அவருடைய பக்தியின் ஆழத்தை அறியாமல் தம்முளே சிரித்துக்கொண்டார்கள். கோயில் கோபுரத்தைக் கண்டால் கும்பிடுவது முறை; இறைவன் திருவுருவத்தைக் கண்டால் தொழுவது கியாயம்; பெரியவர் களேக் கண்டால் கைகூப்புவதற்குப் பொருள் உண்டு. கணத்துக்குக் கணம் ஒரு காரணமும் இல்லாமல் கையெடுத் துத் தொழுவது நல்ல விலையில் தெளிவான புத்தி உள்ளவர் செய்கிற காரியம் அல்லவே! என்று அயலார் கினைத்தனர்.

அயலார் தம் செயலேக் கண்டு ஒரு விதமாக எண்ணு கிருர்கள் என்பதை அவர் ஒரளவு உணர்ந்தார். கும்பிடா மல் இருந்துதான் பார்ப்போமே!’ என்ற யோசனை அவ ருக்கு உண்டாயிற்று. ஆனல் அது அவரால் முடிகிற காரியமா? இறைவன் கினேவு எழுந்தால் உடனே கைகள் குவிகின்றன. அதைத் தடுக்க முடியவில்லே. தும்மலைத் தடுக்க முடியுமா? அதுமாதிரியே தொழு வதையும் தடுக்க முடியவில்லை. இறைவனே க்னப்ப தளுல்தானே இப்படிச் செய்கிருேம்? சினேக்காமலே இருந்து பார்க்கலாம் என்று எண்ணி முயன்று பார்த் தார். வைத்தியன் நோயாளிக்கு மருந்தைக் கொடுத்து, "இதை உண்ணும்போது குரங்கை கினைக்காதே’ என்ரு ம்ை. அந்த கோயாளி மருந்தை உண்ணுகையில், 'வைத் தியர் எதையோ கினேக்கக்கூடாது என்ருரே!" என்று மறந்த குரங்கை சிக்னத்தானம். அந்தக் கதைபோல ஆகி விட்டது இந்தப் பக்தர் கிலே. "இறைவனே கினேக்காமல் இருக்கவேண்டும்' என்று எண்ணி முயன்று பார்த்தார். அந்த எண்ணத்தில் இறைவன் இருக்கத்தான் இருந்தான்.