பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii

புலம்பிக் கண் அருவி சோர்வார்கள். கின்றும் கினேந்தும் இருக் தும் கிடந்தும் எழுந்தும் தொழுவார்கள். கன்றைப் பிரிந்த பசு வைப் போலக் கதறுவார்கள். அவனேப் பல்லாண்டு பாடி வாழ்த்துவார்கள்.

சேந்தனர் பாட்டில் முருகன் பெருமை வருகிறது. அவன் மலேமகள் மதலே; தேவர் குலம் முழுவதையும் ஆளுவோன்; குமர வேள், வள்ளிதன் மணுளன்; வேல் உலாங் தடக் கையுடை யவன்; சேந்தன்; திருவிடைக் கழியில் குராமரத்தின் நிழலில் எழுந்தருளியிருப்பவன்.

இந்தப் பதின்மூன்று பாடல்களில் சில தலங்களின் இயற்கை கலங்களும் செயற்கைச் செல்வமும் அழகாக வருணிக்கப் பெற்றுள்ளன. திருவிடைக்கழிக் கழனிகளில் சேல்மீன்கள் உலாவுகின்றன. பெரும் பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் வண்டுகள் பண்கள் பல பாடி ஆடுகின்றன; மாளிகை முகப்பில் சண்பகம் அரும்புகின்றது. திருப்பூவணத்தில் ஆவண வீதியில் நெடுகிலே மாடங்கள் இருக்கின்றன; அங்கே சாளரங்களின் அருகில் வைத்த கிலே விளக்குகள் இாவில் இருளேக் கிழித்து இலங்கு கின்றன. தஞ்சையில் பெரிய மதில் சூழ்ந்திருக்கிறது; மலேயைப் போன்ற தோற்றமுடைய நாடகசாலைகளில் இளமயிலனைய மகளிர் இனிய கடம் பயில்கின்றனர்.

ஊரின் பெயர் வேருகவும் அங்குள்ள ஆலயத்தின் பெயர் வேருகவும் பல இடங்களில் இருக்கின்றன. பெரும்பற்றப்புலி யூரில் உள்ள கோயில் திருச்சிற்றம்பலம்; திருக்களங்தையில் உள்ளது ஆதித்தேச்சரம்; கோட்டுரைச் சார்ந்த ஆலயம் திரை லோக்கிய சுந்தரம் (இது இப்போது தனி ஊராக இருக்கிறது); கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது கங்கைகொண்ட சோளேச்சரம், தஞ்சை மாநகர்க் கோயிலின் பெயர் இராச ராசேச்சரம்,

திருவிசைப்பாவிலுள்ள பாடல்களிற் பெரும்பாலன எழு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தங்களாக அமைந்தவை. இதில் உள்ள பாடல்களில் பத்து அவ்விருத்தங்களே (1, 2, 3, 4, 5,7; 8, 9, 10, 11); இரண்டு தரவு கொச்சகக் கலிப்பா (6, 12). திருப் பல்லாண்டு வெண்டளேயமைந்த பாடல்.

வழக்கம்போல் பாடற்பொருளுக்கு ஏற்றபடி கிலேக்களன்களே அமைத்துக் காட்சியாகவும் எண்ணக் கோவையாகவும் உரை யாடலாகவும் இந்தக் கட்டுரைகளே எழுதியுள்ளேன். முன்னுள்ள